• May 04 2024

முல்லைத்தீவில் காலாவதியான அரிசி பொதிகளை வழங்கிய பிரதேச செயலகம்...! மக்கள் விசனம்...!

Sharmi / Apr 25th 2024, 9:24 am
image

Advertisement

அரச மானிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான அரிசி பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அரச மானியம் நிகழ்சி திட்டத்தின் கீழ் தற்போது மக்களுக்கு அரிசி பொதி வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்டு வாழும் மக்களுக்கு காலாவதியான அரிசி பொதிகளே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பொதியில் 2024.03.25 என காலாவதி திகதி அச்சிடப்பட்டிருக்கின்றது. 

அத்தோடு வழங்கப்பட்ட குறித்த பொதி அரிசியும் பழுதடைந்த நிலையிலையே இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகளிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,  

நேற்றையதினம் வழங்கப்பட்ட அரிசி பொதிகள் சில காலாவதியானதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது. 

அதனையடுத்து, அரிசி வழங்கப்பட்டவர்களின் தரவுகளை இன்றையதினம் பெற்று மீண்டும் அவர்களுக்கு தரமான அரிசி பொதிகள் வழங்கப்படும் எனவும்  தெரிவித்தார்.



முல்லைத்தீவில் காலாவதியான அரிசி பொதிகளை வழங்கிய பிரதேச செயலகம். மக்கள் விசனம். அரச மானிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான அரிசி பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அரச மானியம் நிகழ்சி திட்டத்தின் கீழ் தற்போது மக்களுக்கு அரிசி பொதி வழங்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்டு வாழும் மக்களுக்கு காலாவதியான அரிசி பொதிகளே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பொதியில் 2024.03.25 என காலாவதி திகதி அச்சிடப்பட்டிருக்கின்றது. அத்தோடு வழங்கப்பட்ட குறித்த பொதி அரிசியும் பழுதடைந்த நிலையிலையே இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.குறித்த விடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகளிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,  நேற்றையதினம் வழங்கப்பட்ட அரிசி பொதிகள் சில காலாவதியானதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது. அதனையடுத்து, அரிசி வழங்கப்பட்டவர்களின் தரவுகளை இன்றையதினம் பெற்று மீண்டும் அவர்களுக்கு தரமான அரிசி பொதிகள் வழங்கப்படும் எனவும்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement