• Sep 08 2024

அவதிப்படும் மஹிந்த - சந்திப்புக்களிலும் வீழ்ச்சி - ரணில் அனுப்பிய இரகசிய செய்தி samugammedia

Chithra / Jul 16th 2023, 12:55 pm
image

Advertisement

கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவை சந்திக்க தினமும் பெருமளவிலான மக்கள் வந்தாலும், 

தற்போது அவரைச் சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அரசியல்வாதிகள் செல்வது வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச பெரும்பாலும் ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கிறார் எனவும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழங்கால் மற்றும் முதுகுவலி காரணமாக, அவரை அதிக ஓய்வு எடுக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவை சந்திக்க தினமும் பெருமளவிலான மக்கள் வந்தாலும், தற்போது அவரைச் சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக 

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய அரசியல் கூட்டங்கள் எதுவும் பொதுஜன பெரமுனவால் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அனுப்பிய இரகசிய செய்தியினை தொடர்ந்து அவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரகசியமான செய்தி குறித்து இதுவரையிலும் எந்த செய்தியும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இச்செய்தி கிடைத்தவுடன் மகிந்த அதிகமாக வெளியே வராததோடு, மனவருத்தத்தோடு இருந்ததாக அவருக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

மொட்டு கட்சி செயற்படும் விதம், அரசாங்கம் செயற்படும் விதம், குறிப்பிட்ட நெருக்கமானவர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றால் விரக்தியில் இருந்த மகிந்தவுக்கு அதிபரின் செய்தி மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மகிந்தவை தவிர இச்செய்தி முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் கிடைத்திருக்கலாம் என நம்பப்டுகின்றது


அவதிப்படும் மஹிந்த - சந்திப்புக்களிலும் வீழ்ச்சி - ரணில் அனுப்பிய இரகசிய செய்தி samugammedia கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவை சந்திக்க தினமும் பெருமளவிலான மக்கள் வந்தாலும், தற்போது அவரைச் சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அரசியல்வாதிகள் செல்வது வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மகிந்த ராஜபக்ச பெரும்பாலும் ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கிறார் எனவும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முழங்கால் மற்றும் முதுகுவலி காரணமாக, அவரை அதிக ஓய்வு எடுக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.எவ்வாறாயினும், கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவை சந்திக்க தினமும் பெருமளவிலான மக்கள் வந்தாலும், தற்போது அவரைச் சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், முக்கிய அரசியல் கூட்டங்கள் எதுவும் பொதுஜன பெரமுனவால் ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அனுப்பிய இரகசிய செய்தியினை தொடர்ந்து அவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரகசியமான செய்தி குறித்து இதுவரையிலும் எந்த செய்தியும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.இச்செய்தி கிடைத்தவுடன் மகிந்த அதிகமாக வெளியே வராததோடு, மனவருத்தத்தோடு இருந்ததாக அவருக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவிக்கின்றன.மொட்டு கட்சி செயற்படும் விதம், அரசாங்கம் செயற்படும் விதம், குறிப்பிட்ட நெருக்கமானவர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றால் விரக்தியில் இருந்த மகிந்தவுக்கு அதிபரின் செய்தி மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் மகிந்தவை தவிர இச்செய்தி முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் கிடைத்திருக்கலாம் என நம்பப்டுகின்றது

Advertisement

Advertisement

Advertisement