பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, குறித்த குற்றவாளிகளை விடுவித்து முன்னாள் ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தார்.
அவர் தாக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை கைதிக்கு மைத்திரி வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது - உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதன்படி, குறித்த குற்றவாளிகளை விடுவித்து முன்னாள் ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தார்.அவர் தாக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.