• Sep 08 2024

பலர் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்- ஆதங்கப்படும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித.! samugammedia

Sharmi / Apr 12th 2023, 11:26 am
image

Advertisement

ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

'நான் சொல்ல வேண்டியதை அவர்களிடம் சொன்னேன், அவர்கள் என் நிலையை முழுமையாக புரிந்து கொண்டனர். ஊடகங்கள் உட்பட பெரும்பாலானோர், என்னைத் தவறாகப் புரிந்து சில தகவல்களை வெளியிடுகின்றனர்.

நான் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் மற்றும் ஊடக அறிக்கைகளை மறுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்,

ஆனால் எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பின் முழு வீடியோ காட்சிகளை மட்டுமே வெளியிடுவேன் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்று மாலை ஜக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் முடிவு இந்த விடயம் தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

எதிர்பார்த்தபடி ராஜித சேனாரத்ன குறுக்கே செல்லமாட்டார்' என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.

அண்மைக்காலமாக ராஜித சேனாரத்ன அரசங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அமைச்சு பதவி ஒன்றை பெறவுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து ஜக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்கு குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.

பலர் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்- ஆதங்கப்படும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித. samugammedia ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.'நான் சொல்ல வேண்டியதை அவர்களிடம் சொன்னேன், அவர்கள் என் நிலையை முழுமையாக புரிந்து கொண்டனர். ஊடகங்கள் உட்பட பெரும்பாலானோர், என்னைத் தவறாகப் புரிந்து சில தகவல்களை வெளியிடுகின்றனர்.நான் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் மற்றும் ஊடக அறிக்கைகளை மறுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர், ஆனால் எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பின் முழு வீடியோ காட்சிகளை மட்டுமே வெளியிடுவேன் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை நேற்று மாலை ஜக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் முடிவு இந்த விடயம் தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.எதிர்பார்த்தபடி ராஜித சேனாரத்ன குறுக்கே செல்லமாட்டார்' என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.அண்மைக்காலமாக ராஜித சேனாரத்ன அரசங்கத்துடன் இணையவுள்ளதாகவும் அமைச்சு பதவி ஒன்றை பெறவுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து ஜக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்கு குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement