• Sep 08 2024

தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய தண்ணீர் பற்றாக்குறை- ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல்! samugammedia

Tamil nila / Nov 13th 2023, 9:52 pm
image

Advertisement

தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அதிகமான சிறுவர்கள் முகங்கொடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலகின் மற்ற பிராந்தியங்களை விடவும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கை, நேபாளம், மாலைத்தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட 347 மில்லியன் சிறுவர்கள் அதிக தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக ஐ.நா. சிறுவர்கள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி, மோசமான வானிலை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் காரணமாக தெற்காசியாவில் மில்லியன்கணக்கான சிறுவர்கள் குடிப்பதற்கு போதுமான நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் கூறப்படுகிறது.

மேலும், கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தென்னாபிரிக்காவில் 130 மில்லியன் சிறுவர்கள் மோசமான தண்ணீர் பற்றாக்குறையால் ஆபத்தை நோக்கிய நிலையில் உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய தண்ணீர் பற்றாக்குறை- ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல் samugammedia தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அதிகமான சிறுவர்கள் முகங்கொடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.உலகின் மற்ற பிராந்தியங்களை விடவும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, இலங்கை, நேபாளம், மாலைத்தீவுகள், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட 347 மில்லியன் சிறுவர்கள் அதிக தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக ஐ.நா. சிறுவர்கள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.வெள்ளம், வறட்சி, மோசமான வானிலை மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் காரணமாக தெற்காசியாவில் மில்லியன்கணக்கான சிறுவர்கள் குடிப்பதற்கு போதுமான நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் கூறப்படுகிறது.மேலும், கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தென்னாபிரிக்காவில் 130 மில்லியன் சிறுவர்கள் மோசமான தண்ணீர் பற்றாக்குறையால் ஆபத்தை நோக்கிய நிலையில் உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement