• Nov 28 2024

ஊடக ஒழுங்குமுறை கட்டுப்பாடு அவசியம் - மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு..!samugammedia

Tharun / Jan 24th 2024, 8:48 pm
image

பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய வகையில் நாட்டில் ஊடக கட்டுப்பாட்டு சட்டம் அவசியமாகும். சமூக வலைத்தளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதன் மூலமே திகன கலவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

இன்றைய தினம் (24) பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில்...

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் திகனவில் கலவரம் ஏற்பட்ட போது ஒருவாரத்திற்கு சமூக வலைத்தளங்களை முடக்கினேன். அதனை நான் செய்யாமல் இருந்திருந்தால் நாட்டில் சிங்கள முஸ்லிம்  கலவரம் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும்.

சமூகவலைத்தலளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதாலே அதனை கட்டுப்படுத்த முடிந்தது. எவ்வாறாயினும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும். என்றாலும் இந்த சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் மிகவும் இறுக்கமானதாகும்.

ஊடக ஒழுங்குமுறை, கட்டுப்பாடு அவசியமாகும். இல்லையென்றால் ஊடக உரிமையாளர்களே நாட்டை நிர்வாகம் செய்யும் நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடக ஒழுங்குமுறை கட்டுப்பாடு அவசியம் - மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு.samugammedia பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு தண்டனை வழங்கக் கூடிய வகையில் நாட்டில் ஊடக கட்டுப்பாட்டு சட்டம் அவசியமாகும். சமூக வலைத்தளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதன் மூலமே திகன கலவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்றைய தினம் (24) பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்.நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் திகனவில் கலவரம் ஏற்பட்ட போது ஒருவாரத்திற்கு சமூக வலைத்தளங்களை முடக்கினேன். அதனை நான் செய்யாமல் இருந்திருந்தால் நாட்டில் சிங்கள முஸ்லிம்  கலவரம் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும்.சமூகவலைத்தலளங்களை ஒருவார காலத்துக்கு இடை நிறுத்தியதாலே அதனை கட்டுப்படுத்த முடிந்தது. எவ்வாறாயினும் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் சட்டங்கள் இருக்க வேண்டும். என்றாலும் இந்த சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் மிகவும் இறுக்கமானதாகும்.ஊடக ஒழுங்குமுறை, கட்டுப்பாடு அவசியமாகும். இல்லையென்றால் ஊடக உரிமையாளர்களே நாட்டை நிர்வாகம் செய்யும் நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement