• Sep 08 2024

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக்கூடாது...!அரசு மீறினால் போராட்டங்கள் வெடிக்கும்.! samugammedia

Sharmi / Apr 24th 2023, 4:49 pm
image

Advertisement

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவு வழங்கக்கூடாதென யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட்டத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மாணவர் சமூகத்திற்கும் பாரதூரமானது எனவும் தொடர்ச்சியாக இதனை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வந்தால் வடகிழக்கு தழுவிய ரீதியில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு மனிதன் சுதந்திரமாக ஜனநாயக ரீதியாக தன்னுடைய கருத்தை தெரிவிப்பதற்கு எதிராக கடுமையாக இயற்றப்பட்ட சட்டமூலமாகவே  இந்த சட்ட மூலம் காணப்படுகிறது.

மேலும் ஜனநாயக ரீதியாக  போராடுகின்ற மாணவர்கள் கைது செய்து  இதன் மூலம் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலமானது ஒரு நியாயப்படுத்தப்பட்ட சட்டம் மூலமாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு வழங்ககூடாது என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக்கூடாது.அரசு மீறினால் போராட்டங்கள் வெடிக்கும். samugammedia அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவு வழங்கக்கூடாதென யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் கோரிக்கை முன்வைத்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட்டத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மாணவர் சமூகத்திற்கும் பாரதூரமானது எனவும் தொடர்ச்சியாக இதனை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வந்தால் வடகிழக்கு தழுவிய ரீதியில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஒரு மனிதன் சுதந்திரமாக ஜனநாயக ரீதியாக தன்னுடைய கருத்தை தெரிவிப்பதற்கு எதிராக கடுமையாக இயற்றப்பட்ட சட்டமூலமாகவே  இந்த சட்ட மூலம் காணப்படுகிறது.மேலும் ஜனநாயக ரீதியாக  போராடுகின்ற மாணவர்கள் கைது செய்து  இதன் மூலம் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இலங்கை நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலமானது ஒரு நியாயப்படுத்தப்பட்ட சட்டம் மூலமாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு வழங்ககூடாது என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement