• Jan 24 2025

25 சதவீத விலைக் குறைப்பு - உணவுப் பொருட்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

Chithra / Dec 8th 2024, 3:47 pm
image


லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 25 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பண்டிகை காலங்களில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது பொதுவாக சந்தையினுள் காணப்படும் ஒரு நிலையாகும். எனவே அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.

நாட்டினுள் பொருட்களின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் முயற்சிக்கின்றார்கள். நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கு முயற்சிப்போம்.

மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறு சந்தையினுள் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்.

தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்கள் ஊடாக தலையிடுவதற்கு  நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

குறிப்பாக சதொச மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 25 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். 

பண்டிகைக் காலங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள  அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.  

25 சதவீத விலைக் குறைப்பு - உணவுப் பொருட்கள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 25 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிவித்துள்ளார்.நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பண்டிகை காலங்களில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது பொதுவாக சந்தையினுள் காணப்படும் ஒரு நிலையாகும். எனவே அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.நாட்டினுள் பொருட்களின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் முயற்சிக்கின்றார்கள். நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கு முயற்சிப்போம்.மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறு சந்தையினுள் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதவாறு இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்.தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்கள் ஊடாக தலையிடுவதற்கு  நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.குறிப்பாக சதொச மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 25 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். பண்டிகைக் காலங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள  அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement