• Jul 27 2024

மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர்களுக்கு ஆப்பு..! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Chithra / Dec 13th 2022, 1:49 pm
image

Advertisement

தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த, பல அமைச்சர்களினால் அதிகளவான மின்சாரக் கட்டணங்கள் தீர்க்கப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு புதிய செயல்முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களை காலி செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அந்த காலத்தின் போது அத்தகைய வீடுகளுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த முரண்பாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், செலுத்தப்படாத தொகை இலட்சக்கணக்கான ரூபாயாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

உத்தியோகபூர்வ இல்லங்களின் செலுத்தப்படாத கட்டணங்கள் மீதும் மேலதிகமாக வட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.


மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர்களுக்கு ஆப்பு. எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த, பல அமைச்சர்களினால் அதிகளவான மின்சாரக் கட்டணங்கள் தீர்க்கப்படாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டு புதிய செயல்முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவர்களது உத்தியோகபூர்வ இல்லங்களை காலி செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அந்த காலத்தின் போது அத்தகைய வீடுகளுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.இந்த முரண்பாடு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், செலுத்தப்படாத தொகை இலட்சக்கணக்கான ரூபாயாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.உத்தியோகபூர்வ இல்லங்களின் செலுத்தப்படாத கட்டணங்கள் மீதும் மேலதிகமாக வட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement