• Nov 28 2024

முப்படை வீரர்களின் தினசரி கொடுப்பனவு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம்..!

Chithra / Jan 14th 2024, 8:13 am
image



முப்படை வீரர்களின் தினசரி ரேஷன் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் முப்படைகளின் தளபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரியின் தினசரி ரேஷன் கொடுப்பனவு 1950 ரூபாவாகவும், மற்ற பதவிகளுக்கு 1500 ரூபாவாகவும் உள்ளது.

கடற்படை அதிகாரியின் கொடுப்பனவு 2000 ரூபாவாகவும், விமானப்படை அதிகாரியின் கொடுப்பனவு 1976 ரூபாவாகவும் வழங்கப்படுகின்றது.

மேலும், கடற்படை மற்றும் விமானப்படையின் ஏனைய பதவிகளில் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு ரேஷன் கொடுப்பனவு 1550 ரூபாவாகும், 

சில மாதங்களுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு ரூ.640 ஆக இருந்த இந்த உதவித்தொகை பின்னர் ரூ.960 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது அதனை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

முப்படை வீரர்களின் தினசரி கொடுப்பனவு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம். முப்படை வீரர்களின் தினசரி ரேஷன் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.இது தொடர்பான அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் முப்படைகளின் தளபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இராணுவ அதிகாரியின் தினசரி ரேஷன் கொடுப்பனவு 1950 ரூபாவாகவும், மற்ற பதவிகளுக்கு 1500 ரூபாவாகவும் உள்ளது.கடற்படை அதிகாரியின் கொடுப்பனவு 2000 ரூபாவாகவும், விமானப்படை அதிகாரியின் கொடுப்பனவு 1976 ரூபாவாகவும் வழங்கப்படுகின்றது.மேலும், கடற்படை மற்றும் விமானப்படையின் ஏனைய பதவிகளில் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு ரேஷன் கொடுப்பனவு 1550 ரூபாவாகும், சில மாதங்களுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு ரூ.640 ஆக இருந்த இந்த உதவித்தொகை பின்னர் ரூ.960 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தற்போது அதனை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement