• Jul 27 2024

சாரதிகள் செய்யும் தவறுகள் - இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை

Chithra / Dec 27th 2022, 10:34 am
image

Advertisement

சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் புதிய முறைமையை இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகள் வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அடிப்படை முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் இது அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சாரதிகள் செய்யும் தவறுகள் - இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமை சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் புதிய முறைமையை இலங்கையில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.இந்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.இதன்படி, வீதியில் செல்லும் சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செய்யும் தவறுகளுக்கு புதிய முறைமையின் கீழ் தகுதி புள்ளிகள் வழங்கப்படவுள்ளது.இந்த நிலையில் அது தொடர்பான அபராதங்களை விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான அடிப்படை முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் எதிர்காலத்தில் இது அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement