• Jan 18 2025

யாழில் பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி நகைக் கடையில் பணம் பறிப்பு..!

Sharmi / Jan 17th 2025, 9:58 am
image

பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி நகைக் கடைக்கு சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை அபகரித்து சென்ற சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்கு நேற்று மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபாய் பணத்தை அபகரித்து சென்றுள்ளது.

பொலிஸ் புலனாய்வு பிரிவு (ரிஐடி) என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு கடையினை சோதனையிடப் போவதாக தெரிவித்து கடையில் இருந்தவர்களுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


யாழில் பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி நகைக் கடையில் பணம் பறிப்பு. பொலிஸ் புலனாய்வாளர்கள் என கூறி நகைக் கடைக்கு சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை அபகரித்து சென்ற சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்கு நேற்று மதியம் சென்ற குழுவொன்று 30 லட்சம் ரூபாய் பணத்தை அபகரித்து சென்றுள்ளது.பொலிஸ் புலனாய்வு பிரிவு (ரிஐடி) என தெரிவித்து நகைக் கடைக்குள் நுழைந்த மூவரடங்கிய குழு கடையினை சோதனையிடப் போவதாக தெரிவித்து கடையில் இருந்தவர்களுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.இந்நிலையில் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement