மேலும் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

86

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 222 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து 739 பேராக அதிகரித்துள்ளது.

மேலும், வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்ற மேலும் 732 பேர் குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதற்கமைய  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 842 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், 4 ஆயிரத்து 225 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 617 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: