• Nov 19 2024

கிளிநொச்சியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி!

Chithra / Sep 3rd 2024, 3:17 pm
image


கிளிநொச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து தொல்லாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 

இதற்கு மேலதிகமாக வாக்கெண்ணும் பணிக்காக பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் 8 நிலையங்களில் நடைபெறவிருக்கின்றது.

நாளை முதல் நடைபெறவிருக்கின்ற தபால்மூல வாக்களிப்பிற்காக 3656 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். 

அவர்களுக்காக 96 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் நாளை 4ம் திகதியும், பொலிசார் 4ம் மற்றும் 6ம் திகதியும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்காக 5ம், 6ம் திகதியும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நாட்களில் அவசர வேலை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணத்தால் வாக்களிப்பை தவறவிடுகின்ற உத்தியோகத்தர்கள். 11ம், 12ம் திகதிகளில் பழைய மாவட்டச் செயலகத்தில் தமது வாக்கை செலுத்த முடியும்.

இதேவேளை, வாக்காளர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறும், இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்குரிமையை பயன்படுத்துமாறும் இதன்போது அவர் தெரிவித்தார்.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததா என அவரிடம் வினவிய போது, 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


கிளிநொச்சியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி கிளிநொச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து தொல்லாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.அதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மேலதிகமாக வாக்கெண்ணும் பணிக்காக பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் 8 நிலையங்களில் நடைபெறவிருக்கின்றது.நாளை முதல் நடைபெறவிருக்கின்ற தபால்மூல வாக்களிப்பிற்காக 3656 அரச உத்தியோகத்தர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். அவர்களுக்காக 96 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் நாளை 4ம் திகதியும், பொலிசார் 4ம் மற்றும் 6ம் திகதியும் ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்காக 5ம், 6ம் திகதியும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த நாட்களில் அவசர வேலை உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணத்தால் வாக்களிப்பை தவறவிடுகின்ற உத்தியோகத்தர்கள். 11ம், 12ம் திகதிகளில் பழைய மாவட்டச் செயலகத்தில் தமது வாக்கை செலுத்த முடியும்.இதேவேளை, வாக்காளர்கள் அனைவரும் நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறும், இறுதிநேரம் வரை காத்திருக்காது வாக்குரிமையை பயன்படுத்துமாறும் இதன்போது அவர் தெரிவித்தார்.தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததா என அவரிடம் வினவிய போது, 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement