• Jun 17 2024

முல்லைத்தீவு மனித புதைகுழியில் 15க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்..! பாதுகாப்பும் தீவிரம் samugammedia

Chithra / Jul 6th 2023, 4:15 pm
image

Advertisement

 முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் மனிதபுதைகுழிகள் தோண்டப்படும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் 15க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளது சடலங்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வு பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் நீதிபதி முன்னிலையில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த  பகுதிக்கு ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ சுமந்திரன் சென்றுள்ளார்.   

இதேவேளை அங்கு பொது மக்கள் அதிகளவானோர் சென்றுள்ளதாகவும் அதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.

இதனால் அப்பகுதியின் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள், பொலிஸார், விசேட அதிரடிபடையினர், சோகோ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களை சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.



முல்லைத்தீவு மனித புதைகுழியில் 15க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள். பாதுகாப்பும் தீவிரம் samugammedia  முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயில் மனிதபுதைகுழிகள் தோண்டப்படும் பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் 15க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளது சடலங்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வு பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.நீதிமன்ற உத்தரவின் பேரில், பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் நீதிபதி முன்னிலையில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டது.குறித்த  பகுதிக்கு ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ சுமந்திரன் சென்றுள்ளார்.   இதேவேளை அங்கு பொது மக்கள் அதிகளவானோர் சென்றுள்ளதாகவும் அதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.இதனால் அப்பகுதியின் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.மேலும் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள், பொலிஸார், விசேட அதிரடிபடையினர், சோகோ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களை சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement