• May 24 2025

மாட்டுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு! யாழில் துயரம்

Chithra / Jan 9th 2025, 11:29 am
image

 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி வல்லை பகுதியில் நேற்று  இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த வயது 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து  பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி பின் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் யா /நெல்லியடி மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், தவில் வித்துவானின் மகனுமான இளைஞரே உயிரிழந்துள்ளார்

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை  அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாட்டுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு யாழில் துயரம்  யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி வல்லை பகுதியில் நேற்று  இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த வயது 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்திலிருந்து  பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வல்லைப் பகுதியில், மாட்டுடன் மோதி பின் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் யா /நெல்லியடி மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், தவில் வித்துவானின் மகனுமான இளைஞரே உயிரிழந்துள்ளார்விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை  அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now