• Nov 23 2024

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியினர் என்னை ஏமாற்றிவிட்டனர்- ரணில் கவலை..!

Sharmi / Sep 24th 2024, 9:25 am
image

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள்  அநுர குமார திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொதுஜன பெரமுனவில் தமக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தாம் நினைத்த அளவுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு, மல் வீதியிலுள்ள அரசியல் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க வந்த போது மக்கள் அவர்களுடன் வரவில்லை எனத் தோன்றுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி,  பொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பான்மையான மக்கள் அனுர குமார திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது நான்கு புதிய முகங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியினர் என்னை ஏமாற்றிவிட்டனர்- ரணில் கவலை. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள்  அநுர குமார திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதேவேளை, பொதுஜன பெரமுனவில் தமக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தாம் நினைத்த அளவுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.கொழும்பு, மல் வீதியிலுள்ள அரசியல் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க வந்த போது மக்கள் அவர்களுடன் வரவில்லை எனத் தோன்றுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி,  பொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பான்மையான மக்கள் அனுர குமார திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.அடுத்ததாக பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.பொதுத் தேர்தலுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது நான்கு புதிய முகங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement