• May 18 2024

பொறுப்பற்றவர்களின் செயற்பாட்டால் முதலாம் இடத்தை பறிகொடுத்த முல்லைத்தீவு பெண்கள் அணி! samugammedia

Tamil nila / Jun 2nd 2023, 1:26 pm
image

Advertisement

முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தின் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதும் பொறுப்பேற்ற பாடசாலை நிர்வாகத்தினால் முதலாம் இடத்தை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு விசுவமாடு மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இருபது வயதிற்கு உட்பட்ட பெண்கள் உதை பந்தாட்ட அணி வலயமட்ட போட்டியில் பங்குபற்றி முதல் இடத்தை பெற்றது.

குறித்த போட்டியில் விசுவமடு மகா வித்தியாலய பெண்கள் அணி முதலாம் இடத்தை பெற்றதாக கடமையில் இருந்த உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்ட போதும் 10 நாட்களின் பின்னர் போட்டி விதிமுறைகளை மீறிய காரணத்தால் குறித்த அணி நீக்கப்பட்டதாக பாடசாலைக்கு அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் வட மாகாண ஆளுநருக்கு  எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதத்தில் தமது பாடசாலை அணி வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு  மாகாண மட்டத்தில் பங்கு பெற்றுவதற்காக அனுமதிக்குமாறு கோரி எழுத்து மூலம் கடிதம் அனுப்பி உள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் பாடசாலை இருந்து அணி தெரிவு செய்யப்பட்ட நிலையில் தவறுகள் இடம் பெற்றால் பாடசாலை நிர்வாகமே பொறுப்பு கூற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

பொறுப்பற்றவர்களின் செயற்பாட்டால் முதலாம் இடத்தை பறிகொடுத்த முல்லைத்தீவு பெண்கள் அணி samugammedia முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தின் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதும் பொறுப்பேற்ற பாடசாலை நிர்வாகத்தினால் முதலாம் இடத்தை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,முல்லைத்தீவு விசுவமாடு மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இருபது வயதிற்கு உட்பட்ட பெண்கள் உதை பந்தாட்ட அணி வலயமட்ட போட்டியில் பங்குபற்றி முதல் இடத்தை பெற்றது.குறித்த போட்டியில் விசுவமடு மகா வித்தியாலய பெண்கள் அணி முதலாம் இடத்தை பெற்றதாக கடமையில் இருந்த உத்தியோகத்தர்களால் அறிவிக்கப்பட்ட போதும் 10 நாட்களின் பின்னர் போட்டி விதிமுறைகளை மீறிய காரணத்தால் குறித்த அணி நீக்கப்பட்டதாக பாடசாலைக்கு அறிவிக்கப்பட்டது.இதன் காரணமாக போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வடக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் வட மாகாண ஆளுநருக்கு  எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கடிதத்தில் தமது பாடசாலை அணி வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு  மாகாண மட்டத்தில் பங்கு பெற்றுவதற்காக அனுமதிக்குமாறு கோரி எழுத்து மூலம் கடிதம் அனுப்பி உள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் பாடசாலை இருந்து அணி தெரிவு செய்யப்பட்ட நிலையில் தவறுகள் இடம் பெற்றால் பாடசாலை நிர்வாகமே பொறுப்பு கூற வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement