• Jun 18 2024

ஏழு மாத கர்ப்பிணியை குத்தி கொலை செய்த காதலன்- அதிர்ச்சியை உருவாக்கிய பின்னணி! samugammedia

Tamil nila / Jun 2nd 2023, 1:42 pm
image

Advertisement

இத்தாலியிலுள்ள மிலனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தன் காதலனான Alessandro Impagnatiello (30)உடன் வாழ்ந்துவந்த ஏழு மாத கர்ப்பிணியான Giulia Tramontano (29), ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக கிடைத்த தகவலின்பேரில். பொலிஸார் அவரைத் தீவிரமாக தேடிவந்தார்கள்.

Giulia தன் காதலனுடன் வாழ்ந்துவந்த வீட்டை பொலிஸார் சோதனையிடும்போது, அங்கு இரத்தத்துளிகள் கிடப்பதைக் காணவே, பொலிஸாரின் சந்தேகம் Giuliaவின் காதலனான Alessandro மீது திரும்பியுள்ளது.சுமார் மூன்று நாட்கள் விசாரணைக்குப்பின், புதன்கிழமை நள்ளிரவு, தான் தான் Giuliaவைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் Alessandro.

Alessandro ஏழு மாதக் கர்ப்பிணியான தன் காதலியுடன் வாழும்போதே, அலுவலகத்தில் வேறொரு பெண்ணுடனும் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணும் கர்ப்பமடைந்துள்ளார்.இந்த விடயம் Giuliaவுக்குத் தெரியவரவே, வீட்டில் வாக்குவாதம் உருவாக, Giuliaவைக் கத்தியால் குத்திக் கொலை செய்த Alessandro, குளியலறையில் வைத்து அவரது உடலை எரிக்க முயன்றிருக்கிறார். அது முடியாமல் போகவே, வீட்டுக்கு வெளியே ஓரிடத்தில் வைத்து அவரது உடலை எரிக்க முயன்றிருக்கிறார். அதுவும் முடியாததால், ஓரிடத்தில் Giuliaவின் உடலை மறைந்துவைத்திருக்கிறார்.

பின்னர், தன் மற்றொரு காதலிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிய Alessandro, அதில் Giulia போய்விட்டாள், நான் இப்போது சுதந்திர மனிதன் என்று தெரிவித்துள்ளார்.விடயம் என்னவென்றால், அந்தப் பெண்ணுக்கு Giuliaவைக் குறித்து எதுவும் தெரியாது. Giuliaவைக் கொன்று அவரது உடலை வீட்டுக்குள் மறைத்துவைத்துவிட்டு, நள்ளிரவு 2.00 மணியளவில் தன் மற்றொரு காதலியைக் காணச்சென்றுள்ளார் Alessandro. ஆனால், பயந்துபோன அந்தப் பெண், அவரை வீட்டுக்குள்ளேயே விடவில்லையாம்.


Alessandro, சனிக்கிழமை இரவு 7.30 மணியிலிருந்து 8.00 மணிக்குள் Giuliaவைக் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் கருதுகிறார்கள்.

 

ஏழு மாத கர்ப்பிணியை குத்தி கொலை செய்த காதலன்- அதிர்ச்சியை உருவாக்கிய பின்னணி samugammedia இத்தாலியிலுள்ள மிலனில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தன் காதலனான Alessandro Impagnatiello (30)உடன் வாழ்ந்துவந்த ஏழு மாத கர்ப்பிணியான Giulia Tramontano (29), ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக கிடைத்த தகவலின்பேரில். பொலிஸார் அவரைத் தீவிரமாக தேடிவந்தார்கள்.Giulia தன் காதலனுடன் வாழ்ந்துவந்த வீட்டை பொலிஸார் சோதனையிடும்போது, அங்கு இரத்தத்துளிகள் கிடப்பதைக் காணவே, பொலிஸாரின் சந்தேகம் Giuliaவின் காதலனான Alessandro மீது திரும்பியுள்ளது.சுமார் மூன்று நாட்கள் விசாரணைக்குப்பின், புதன்கிழமை நள்ளிரவு, தான் தான் Giuliaவைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் Alessandro.Alessandro ஏழு மாதக் கர்ப்பிணியான தன் காதலியுடன் வாழும்போதே, அலுவலகத்தில் வேறொரு பெண்ணுடனும் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணும் கர்ப்பமடைந்துள்ளார்.இந்த விடயம் Giuliaவுக்குத் தெரியவரவே, வீட்டில் வாக்குவாதம் உருவாக, Giuliaவைக் கத்தியால் குத்திக் கொலை செய்த Alessandro, குளியலறையில் வைத்து அவரது உடலை எரிக்க முயன்றிருக்கிறார். அது முடியாமல் போகவே, வீட்டுக்கு வெளியே ஓரிடத்தில் வைத்து அவரது உடலை எரிக்க முயன்றிருக்கிறார். அதுவும் முடியாததால், ஓரிடத்தில் Giuliaவின் உடலை மறைந்துவைத்திருக்கிறார்.பின்னர், தன் மற்றொரு காதலிக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிய Alessandro, அதில் Giulia போய்விட்டாள், நான் இப்போது சுதந்திர மனிதன் என்று தெரிவித்துள்ளார்.விடயம் என்னவென்றால், அந்தப் பெண்ணுக்கு Giuliaவைக் குறித்து எதுவும் தெரியாது. Giuliaவைக் கொன்று அவரது உடலை வீட்டுக்குள் மறைத்துவைத்துவிட்டு, நள்ளிரவு 2.00 மணியளவில் தன் மற்றொரு காதலியைக் காணச்சென்றுள்ளார் Alessandro. ஆனால், பயந்துபோன அந்தப் பெண், அவரை வீட்டுக்குள்ளேயே விடவில்லையாம்.Alessandro, சனிக்கிழமை இரவு 7.30 மணியிலிருந்து 8.00 மணிக்குள் Giuliaவைக் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் கருதுகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement