• Nov 23 2024

வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்கால் நினைவு தாங்கிய ஊர்தி: மக்கள் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி..!!

Tamil nila / May 16th 2024, 7:58 pm
image

முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவு தாங்கிய ஊர்தியானது இன்று  வவுனியாவிற்கு வருகை தந்த நிலையில் மக்கள் திரண்டு கண்ணீர் மல்க மலர்தூபி அஞ்சலி செலுத்தினர்.


தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகிய முள்ளியவாய்கால் பேரவலத்தின் சாட்சியங்களை தாங்கிய ஊர்தியானது வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கு பயணித்து எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவு திடலை சென்றடையவுள்ளது.



வவுனியாவிற்கு வருகை தந்த ஊர்த்திக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தீபம், ஏற்றியும் மலர் தூபியும் அஞ்சலி செலுத்தினர். இதன்போது தாய்மார் கண்ணீர் மல்ல அஞ்சலி செலுத்தியதுடன் வீதியால் சென்ற பலரும் அஞ்சலி செலுத்தினர்.


தமிழின படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம் - சுயநிர்ணம்-இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும் என்னும் வாசங்களை தாங்கியவாறும், போரின் வடுக்களை சுமந்த படங்களை தாங்கியவாறும் குறித்த ஊர்தி பவனி வந்தது.

தொடர்ந்து பொங்கு தமிழ் நினைவு தூபி, பண்டாரவன்னியன் சதுக்கம், பசார் வீதி, குருமன்காடு, தாண்டிக்குளம், தரணிக்குளம், ஈச்சங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஊர்தி சென்ற நிலையில் அங்கு மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்கால் நினைவு தாங்கிய ஊர்தி: மக்கள் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி. முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவு தாங்கிய ஊர்தியானது இன்று  வவுனியாவிற்கு வருகை தந்த நிலையில் மக்கள் திரண்டு கண்ணீர் மல்க மலர்தூபி அஞ்சலி செலுத்தினர்.தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகிய முள்ளியவாய்கால் பேரவலத்தின் சாட்சியங்களை தாங்கிய ஊர்தியானது வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கு பயணித்து எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவு திடலை சென்றடையவுள்ளது.வவுனியாவிற்கு வருகை தந்த ஊர்த்திக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தீபம், ஏற்றியும் மலர் தூபியும் அஞ்சலி செலுத்தினர். இதன்போது தாய்மார் கண்ணீர் மல்ல அஞ்சலி செலுத்தியதுடன் வீதியால் சென்ற பலரும் அஞ்சலி செலுத்தினர்.தமிழின படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம் - சுயநிர்ணம்-இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும் என்னும் வாசங்களை தாங்கியவாறும், போரின் வடுக்களை சுமந்த படங்களை தாங்கியவாறும் குறித்த ஊர்தி பவனி வந்தது.தொடர்ந்து பொங்கு தமிழ் நினைவு தூபி, பண்டாரவன்னியன் சதுக்கம், பசார் வீதி, குருமன்காடு, தாண்டிக்குளம், தரணிக்குளம், ஈச்சங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஊர்தி சென்ற நிலையில் அங்கு மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement