35 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் எஸ்.மஜுன் அதிபர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் ,"கதிர்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (30) இடம்பெற்றது.
இந்நிகழ்வை பாடசாலை சமூகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதன்போது கல்விப் பணியில் சிறப்பாக செயற்பட்டு மாணவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவரோடும் நன்றாக பழகி தனது 60வது வயதில் இன்று ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபரைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி , நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ,உதவிக் கல்விப்பாளர்கள்,முன்னால் கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் ஷெரீப்,பாடசாலைகளின் அதிபர்கள் , பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
35 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் 35 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் எஸ்.மஜுன் அதிபர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் ,"கதிர்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூதூர் அல்ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (30) இடம்பெற்றது.இந்நிகழ்வை பாடசாலை சமூகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.இதன்போது கல்விப் பணியில் சிறப்பாக செயற்பட்டு மாணவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவரோடும் நன்றாக பழகி தனது 60வது வயதில் இன்று ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபரைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி , நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.இந்நிகழ்வில் அதிதிகளாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ,உதவிக் கல்விப்பாளர்கள்,முன்னால் கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் ஷெரீப்,பாடசாலைகளின் அதிபர்கள் , பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.