இராணுவ சீருடையில் தீபாவளியைக் கொண்டாடும் நரேந்திர மோடி!

159

இந்திய இராணுவ வீரர்களின் சேவை காரணமாகவே பண்டிகை காலத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வருடந்தோறும் தீபாவளியை எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியை காஸ்மீரின் ரஜோரி மாவட்டம் நவ்ஸாரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.

இதன்போது, இராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, இராணுவ வீரர்கள் பாரத மாதாவின் அணிகலன்காக உள்ளனர். அவர்களால் தான் இந்திய நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர் என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: