• Mar 06 2025

ஜூன் மாதத்துக்குள் தேசிய ஊடகக் கொள்கை அமுலாகும்! - அமைச்சர் அறிவிப்பு

Chithra / Mar 6th 2025, 11:48 am
image

 

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்டவர்களுக்கு ஊடக நெறிமுறைகள் குறித்து கல்வி கற்பிக்க ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், தொலைக்காட்சியின் டிஜிட்டல் மயமாக்கலும் விரைவுபடுத்தப்படும்.

இந்த செயல்முறை தாமதமாகியுள்ளது. ஆனாலும் இந்த பயிற்சியை விரைவுபடுத்த விரும்புகிறோம் என்று  கூறினார்.


ஜூன் மாதத்துக்குள் தேசிய ஊடகக் கொள்கை அமுலாகும் - அமைச்சர் அறிவிப்பு  இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்டவர்களுக்கு ஊடக நெறிமுறைகள் குறித்து கல்வி கற்பிக்க ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.மேலும், தொலைக்காட்சியின் டிஜிட்டல் மயமாக்கலும் விரைவுபடுத்தப்படும்.இந்த செயல்முறை தாமதமாகியுள்ளது. ஆனாலும் இந்த பயிற்சியை விரைவுபடுத்த விரும்புகிறோம் என்று  கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement