• Nov 19 2024

தமிழ் - முஸ்லீம் எம்.பிக்களுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கம்! - அமைச்சர் விஜித திட்டம்

Chithra / Nov 11th 2024, 11:04 am
image


நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜித ஹேரத், தமிழ் - முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவது குறித்து தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையுடன் உள்ளது,

எனினும் அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக தனது கட்சி தமிழ் முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கும் என தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் முஸ்லீம் சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவுள்ளோம்,

நாங்கள் ஏற்படுத்த விரும்பும் ஐக்கியத்தை இதன் மூலமே ஏற்படுத்த முடியும், 

தேசிய ஐக்கிய அரசாங்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தேசிய மக்கள் சக்தியால் வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடியும். அனைத்து சமூகங்களிற்காகவும் பணியாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ் - முஸ்லீம் எம்.பிக்களுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கம் - அமைச்சர் விஜித திட்டம் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜித ஹேரத், தமிழ் - முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவது குறித்து தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையுடன் உள்ளது,எனினும் அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக தனது கட்சி தமிழ் முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கும் என தெரிவித்துள்ளார்.எனினும் ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் முஸ்லீம் சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவுள்ளோம்,நாங்கள் ஏற்படுத்த விரும்பும் ஐக்கியத்தை இதன் மூலமே ஏற்படுத்த முடியும், தேசிய ஐக்கிய அரசாங்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தேசிய மக்கள் சக்தியால் வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடியும். அனைத்து சமூகங்களிற்காகவும் பணியாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement