திடீர் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் நாட்டின் 11 மாவட்டங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
71 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மொத்தம் 98 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சீரற்ற வானிலை - நாட்டின் 11 மாவட்டங்களில் சுமார் 17 ஆயிரம் பேர் பாதிப்பு திடீர் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் நாட்டின் 11 மாவட்டங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதனால், ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.71 குடும்பங்களைச் சேர்ந்த 239 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மொத்தம் 98 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.