• May 18 2024

ஐ.தே.க.வில் இணையவுள்ள புதிய முகங்கள் - இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு! அமைச்சர் ஹரின் தகவல்

Chithra / Oct 19th 2023, 10:45 am
image

Advertisement


ஐக்கிய தேசிய கட்சியை புதுமையான முறையில் மீளுருவாக்கம் செய்யும் வகையிலும், உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்குமான முன்னோடியாக ஐ.தே.க.யின் விசேட மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு சனிக்கிழமை (21)  சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஐ.தே.க.வை புதிய வகையில் மீள் உருவாக்கும் நோக்கிலேயே இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

அத்தோடு கட்சி யாப்பினை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் இதன் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு முன்னோடியாக இந்த மாநாடு அமையும்.

பதவிகளுக்கு முக்கியத்துவமளிக்காமல், புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

அதற்கேற்ப புதிய முகங்களும் ஐ.தே.க.வில் இணையவுள்ளன. ஐ.தே.க. முகாமைத்துவ குழுவில் உள்ள பதவிகளில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. அதன் 7 உறுப்பினர்களும் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

2048 ஐ வெற்றி கொள்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் எவ்வாறு கடன் அற்ற இலங்கையை கட்டியெழுப்புவது என்ற திட்டமிடலின் கீழ் எமது இனிவரும் பயணங்கள் அமையும்.

எவ்வாறிருப்பினும் 2048 வரை நாம் ஆட்சியில் இருக்கப் போவதில்லை. எதிர்கால சந்ததியினருக்கு ஏற்ற வகையில் நாட்டை அபிவிருத்தியடையச் செய்து அவர்களிடம் கையளிப்போம் என்றார்.

ஐ.தே.க.வில் இணையவுள்ள புதிய முகங்கள் - இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அமைச்சர் ஹரின் தகவல் ஐக்கிய தேசிய கட்சியை புதுமையான முறையில் மீளுருவாக்கம் செய்யும் வகையிலும், உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்குமான முன்னோடியாக ஐ.தே.க.யின் விசேட மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு சனிக்கிழமை (21)  சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஐ.தே.க.வை புதிய வகையில் மீள் உருவாக்கும் நோக்கிலேயே இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.அத்தோடு கட்சி யாப்பினை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் இதன் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு முன்னோடியாக இந்த மாநாடு அமையும்.பதவிகளுக்கு முக்கியத்துவமளிக்காமல், புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.அதற்கேற்ப புதிய முகங்களும் ஐ.தே.க.வில் இணையவுள்ளன. ஐ.தே.க. முகாமைத்துவ குழுவில் உள்ள பதவிகளில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. அதன் 7 உறுப்பினர்களும் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.2048 ஐ வெற்றி கொள்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் எவ்வாறு கடன் அற்ற இலங்கையை கட்டியெழுப்புவது என்ற திட்டமிடலின் கீழ் எமது இனிவரும் பயணங்கள் அமையும்.எவ்வாறிருப்பினும் 2048 வரை நாம் ஆட்சியில் இருக்கப் போவதில்லை. எதிர்கால சந்ததியினருக்கு ஏற்ற வகையில் நாட்டை அபிவிருத்தியடையச் செய்து அவர்களிடம் கையளிப்போம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement