• Jul 27 2024

மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் உத்தேசம்-நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு! samugammedia

Tamil nila / Nov 29th 2023, 6:35 pm
image

Advertisement

மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மத்தள விமான நிலையத்தில் விமானங்களை பொறுத்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகளை தொடங்குவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தின் மூலம் நாட்டுக்கு ஏற்படும் இழப்பு 1.5 பில்லியனாகக் குறைந்துள்ளது. விமான நிலையம் செயற்படத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட மிகக் குறைந்த இழப்பு இதுவாகும்.

இந்நிலையில், மத்தள விமான நிலையத்தை இலாபமீட்டும் விமான நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

இவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு எதிர்காலத்தில் பல முக்கிய விடயங்களை மேற்கொண்டு மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கிறோம்.‘‘ என்றார். 

மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் உத்தேசம்-நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு samugammedia மத்தள சர்வதேச விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,மத்தள விமான நிலையத்தில் விமானங்களை பொறுத்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகளை தொடங்குவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ளது.மத்தள விமான நிலையத்தின் மூலம் நாட்டுக்கு ஏற்படும் இழப்பு 1.5 பில்லியனாகக் குறைந்துள்ளது. விமான நிலையம் செயற்படத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட மிகக் குறைந்த இழப்பு இதுவாகும்.இந்நிலையில், மத்தள விமான நிலையத்தை இலாபமீட்டும் விமான நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.இவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு எதிர்காலத்தில் பல முக்கிய விடயங்களை மேற்கொண்டு மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கிறோம்.‘‘ என்றார். 

Advertisement

Advertisement

Advertisement