ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக சக்திகுமார் நிரோஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா ஓமந்தையை சேர்ந்த நிரோஸ்குமார் தனது அரசியல் செயற்பாடுகளை வவுனியாவில் மேற்கொண்டு வந்த நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் நேரடி பிரதிநிதியாக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.