• Sep 17 2024

நாடு எந்த நிலையில் சென்றாலும் பரவாயில்லை, எங்களுக்கு அமைச்சு பதவி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிலர்! - சுரேஷ் குற்றச்சாட்டு

Chithra / Jan 2nd 2023, 8:01 pm
image

Advertisement

நாடு தொடர்ந்தும் நெருக்கடிக்குள் இருந்து கொண்டு இருக்கின்றது. நாடு எவ்வாறான நிலையில் சென்றாலும் பரவாயில்லை. தங்கள் கட்சியை வளர்க்க வேண்டும், அமைச்சு பதவியை கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஜனாதிபதி, ஏனையவர்கள் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டது போல் கடன் வாங்கிய நாடுகள் கடனை மீள செலுத்துவதற்கான காலம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அரசாங்கம் எதிர்பார்த்த கடன்கள்  கூட இந்த ஜனவரி, பெப்பவரி மாதங்களில் கிடைக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றது.

மின்சார அமைச்சு, மின்சார கட்டணத்தை மிக அதிகளவில் உயர்த்துவதாக கூறகின்றார்கள். ஏறத்தாழ 80 பில்லியன் ரூபாய்களை அறவீடு செய்ய விரும்புவதாகவும் கூறுகின்றார்கள். இதனால் அடிமட்ட மக்கள்  மிக அதிகளவில் பாதிக்கப்பட போகின்றார்கள்.

இலங்கையில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு ஏற்பட்ட பின்பு, பணவீக்கம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் அரச அதிகாரிகளுக்கான சம்பளமோ, தொழிலாளர்களது சம்பளமோ பெரிதும் அதிகரிக்கப்படவில்லை. வருமானத்தை விட செலவுகள் தான் மக்கள் மீது திணிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.

எரிபொருள் விலையாக இருக்கலாம், சகலதும் அதிகரிக்கப்படுகின்றது. மக்களை 'மரத்தால் விழுத்தவனை மாடெறி மிதித்து என்று கூறுவார்கள். அவ்வாறான கணக்கு தான். பொதுமக்கள் இவ்வாறான மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

மக்களது பொருளாதார பிரச்சினையை தீர்க்காமல் இன்னும் 12 அமைச்சர்களை நியமித்து, அவர்களுக்கு கொடுப்பனவுகள், அதற்கான சலுகைகள், எரிபொருளுக்கான உதவிகள் என்று பல கோடி பணத்தை அதில் செலவிட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆகவே நாடு இருக்கக்கூடிய மோசமான சூழ்நிலையில், நாட்டை பற்றி சிந்திக்கின்றார்களா அல்லது கட்சியை பற்றி சிந்திக்கின்றார்களா? என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கின்றது.

நாடு எவ்வாறான நிலையில் சென்றாலும் பரவாயில்லை. தங்கள் கட்சியை வளர்க்க வேண்டும், அமைச்சு பதவியை கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஜனாதிபதி அல்லது ஏனையவர்கள் இருப்பதாகவும் தோன்றுகின்றது.

இவ்வாறான நிலைமை நாட்டுக்கு உகந்த சூழ்நிலை இல்லை. பிரதமரோ, ஜனாதிபதி எடுக்க கூடிய இவ்வாறான முடிவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். 

மக்களது சுமைகளை நிறுத்த வேண்டும், அரச உத்தியோகத்தர்களோ அல்லது வெளி ஊரில் தொழில் செய்வர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். -என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எந்த நிலையில் சென்றாலும் பரவாயில்லை, எங்களுக்கு அமைச்சு பதவி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிலர் - சுரேஷ் குற்றச்சாட்டு நாடு தொடர்ந்தும் நெருக்கடிக்குள் இருந்து கொண்டு இருக்கின்றது. நாடு எவ்வாறான நிலையில் சென்றாலும் பரவாயில்லை. தங்கள் கட்சியை வளர்க்க வேண்டும், அமைச்சு பதவியை கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஜனாதிபதி, ஏனையவர்கள் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை அரசாங்கம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டது போல் கடன் வாங்கிய நாடுகள் கடனை மீள செலுத்துவதற்கான காலம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அரசாங்கம் எதிர்பார்த்த கடன்கள்  கூட இந்த ஜனவரி, பெப்பவரி மாதங்களில் கிடைக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றது.மின்சார அமைச்சு, மின்சார கட்டணத்தை மிக அதிகளவில் உயர்த்துவதாக கூறகின்றார்கள். ஏறத்தாழ 80 பில்லியன் ரூபாய்களை அறவீடு செய்ய விரும்புவதாகவும் கூறுகின்றார்கள். இதனால் அடிமட்ட மக்கள்  மிக அதிகளவில் பாதிக்கப்பட போகின்றார்கள்.இலங்கையில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு ஏற்பட்ட பின்பு, பணவீக்கம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் அரச அதிகாரிகளுக்கான சம்பளமோ, தொழிலாளர்களது சம்பளமோ பெரிதும் அதிகரிக்கப்படவில்லை. வருமானத்தை விட செலவுகள் தான் மக்கள் மீது திணிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.எரிபொருள் விலையாக இருக்கலாம், சகலதும் அதிகரிக்கப்படுகின்றது. மக்களை 'மரத்தால் விழுத்தவனை மாடெறி மிதித்து என்று கூறுவார்கள். அவ்வாறான கணக்கு தான். பொதுமக்கள் இவ்வாறான மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.மக்களது பொருளாதார பிரச்சினையை தீர்க்காமல் இன்னும் 12 அமைச்சர்களை நியமித்து, அவர்களுக்கு கொடுப்பனவுகள், அதற்கான சலுகைகள், எரிபொருளுக்கான உதவிகள் என்று பல கோடி பணத்தை அதில் செலவிட உள்ளதாக அவர் தெரிவித்தார்.ஆகவே நாடு இருக்கக்கூடிய மோசமான சூழ்நிலையில், நாட்டை பற்றி சிந்திக்கின்றார்களா அல்லது கட்சியை பற்றி சிந்திக்கின்றார்களா என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கின்றது.நாடு எவ்வாறான நிலையில் சென்றாலும் பரவாயில்லை. தங்கள் கட்சியை வளர்க்க வேண்டும், அமைச்சு பதவியை கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஜனாதிபதி அல்லது ஏனையவர்கள் இருப்பதாகவும் தோன்றுகின்றது.இவ்வாறான நிலைமை நாட்டுக்கு உகந்த சூழ்நிலை இல்லை. பிரதமரோ, ஜனாதிபதி எடுக்க கூடிய இவ்வாறான முடிவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். மக்களது சுமைகளை நிறுத்த வேண்டும், அரச உத்தியோகத்தர்களோ அல்லது வெளி ஊரில் தொழில் செய்வர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். -என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement