• Sep 17 2024

ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை - சந்திரிக்கா அதிரடி

Chithra / Aug 12th 2024, 8:31 am
image

Advertisement

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்தனகல்ல தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடல் நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் முதல் மாடியிலுள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து சந்திரிகா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த சந்திரிகா, தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார்.

தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய உறுப்பினர் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை - சந்திரிக்கா அதிரடி  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.அத்தனகல்ல தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த விசேட கலந்துரையாடல் நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் முதல் மாடியிலுள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து சந்திரிகா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.அங்கு கருத்து தெரிவித்த சந்திரிகா, தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார்.தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய உறுப்பினர் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement