தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது கடந்த தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மாவனல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுபநேரத்தில் நாட்டை அநுரவிடம் ஒப்படைத்த மக்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்குகளைப் பதிவிடுவது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர்,
கடந்த இரண்டு தேர்தல்களிலும் அரசாங்கம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதனைத் தெளிவாக நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
அரசியலில், பிரகடனப்படுத்தப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் என இரு அம்சங்கள் காணப்படுகின்றன.
பிரகடனப்படுத் தப்படுவதற்கும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையில் இடைவெளியை விட்டுவிடாமல் சொன்னதைச் செய்வது சிறந்த அரசாங்கமொன்றின் குறிகாட்டியாகும்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் சுபீட்சமான நாட்டையும் அழகிய வாழ்க்கையையும் நாட்டு மக்களுக்குப் பெற்றுத்தருவோம் எனக் கூறிய தரப்பினரின் வாக்குறுதிகளை நம்பி, சுப நேரத்தில் அநுரவிடம் நாட்டை மக்கள் ஒப்படைத்தனர்.
ஆனால் அரசாங்கம் வாக்குறுதியளித்த எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்தார்.
அநுர தரப்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை:சஜித் குற்றச்சாட்டு. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது கடந்த தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.மாவனல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,சுபநேரத்தில் நாட்டை அநுரவிடம் ஒப்படைத்த மக்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம்.இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்குகளைப் பதிவிடுவது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர்,கடந்த இரண்டு தேர்தல்களிலும் அரசாங்கம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதனைத் தெளிவாக நடைமுறைப்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.அரசியலில், பிரகடனப்படுத்தப்படுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதும் என இரு அம்சங்கள் காணப்படுகின்றன.பிரகடனப்படுத் தப்படுவதற்கும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையில் இடைவெளியை விட்டுவிடாமல் சொன்னதைச் செய்வது சிறந்த அரசாங்கமொன்றின் குறிகாட்டியாகும்.கடந்த இரண்டு தேர்தல்களிலும் சுபீட்சமான நாட்டையும் அழகிய வாழ்க்கையையும் நாட்டு மக்களுக்குப் பெற்றுத்தருவோம் எனக் கூறிய தரப்பினரின் வாக்குறுதிகளை நம்பி, சுப நேரத்தில் அநுரவிடம் நாட்டை மக்கள் ஒப்படைத்தனர்.ஆனால் அரசாங்கம் வாக்குறுதியளித்த எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்தார்.