• Nov 19 2024

கிளிநொச்சியில் இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா...!samugammedia

Sharmi / Dec 6th 2023, 11:38 am
image

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக் கூடக் கண்காட்சியும் கிளிநொச்சியில் இன்று(06) இடம்பெற்றது.

தமிழ், சிங்கள, இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் பொம்மலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, தமிழ் இன்னியம் உள்ளிட்ட அம்சங்களை தாங்கியவாறு கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வாகன ஊர்தி பேரணி ஆரம்பமாகி விழா மண்டபத்தை வந்தடைந்ததுடன் அங்கு விசேட கலை நிகழ்வுகளும் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் உயர் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




கிளிநொச்சியில் இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா.samugammedia வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக் கூடக் கண்காட்சியும் கிளிநொச்சியில் இன்று(06) இடம்பெற்றது.தமிழ், சிங்கள, இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் பொம்மலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, தமிழ் இன்னியம் உள்ளிட்ட அம்சங்களை தாங்கியவாறு கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வாகன ஊர்தி பேரணி ஆரம்பமாகி விழா மண்டபத்தை வந்தடைந்ததுடன் அங்கு விசேட கலை நிகழ்வுகளும் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றது.இந்நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் உயர் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement