• Dec 27 2024

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை : யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத் சந்திப்பு

Tharmini / Dec 24th 2024, 3:35 pm
image

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் நேற்று (23) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். 

இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். 

அத்துடன் ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத்தும் யாழ். மாவட்டத்தில் பணிபுரிந்தமையை நினைவுகூர்ந்தார்.

மேலும், யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரைவில் சந்தித்துக் கலந்துரையாடுவோம் என கட்டளைத்தளபதி ஆளுநரிடம் குறிப்பிட்டார். 

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் யகம்பத் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.




வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை : யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத் சந்திப்பு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் நேற்று (23) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத்தும் யாழ். மாவட்டத்தில் பணிபுரிந்தமையை நினைவுகூர்ந்தார்.மேலும், யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரைவில் சந்தித்துக் கலந்துரையாடுவோம் என கட்டளைத்தளபதி ஆளுநரிடம் குறிப்பிட்டார். யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் யகம்பத் கடந்த வெள்ளிக்கிழமை (20) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement

Advertisement