• Oct 28 2024

அரசியலுக்கு மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பால் எங்களது சொந்த முயற்சியிலும் உதவத்தயார் - மோகன்

Tharmini / Oct 28th 2024, 8:18 am
image

Advertisement

எதிரிகளின் சவால்களுக்கு நாங்கள் அஞ்சப் பேவதில்லை பின் நிற்கப் போவதில்லை. உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் அரசியலுக்கு மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பால் எங்களது சொந்த முயற்சியிலும் உதவத் தயாரக இருக்கின்றோம். என மக்கள் மத்தியில் உரையாற்றும் போது சயேட்சை குழு வேட்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் படகு சின்னத்தில் போட்டியிடும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) சவால் விடுத்து தமது உரையினை நிகழ்த்தினார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழு 13 இல் போட்டியிடும் வேட்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் தமது தேர்தல் பரப்புரை கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் நேற்று மாலை (27) இடம்பெற்றது. அங்கு ஏற்பாடு செய்யப்ட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது, உங்களுக்கு இதுவரை காலமும் நடந்தது என்ன எதுவும் இல்லை. வெற்றுப் பேச்சுக்களும் வீரவசனங்களும் ஏமாற்று விந்தைகளும் தங்கள் சார் சார்ந்தவர்களுக்கு அபிவிருத்திகளும் அவர்களுக்கு மாத்திரமே கிடைத்ததே தவிர உங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கான மாற்று சக்தியாக நாங்கள் வந்திருக்கிறோம் உங்களுக்கு உதவுவதற்காக.

அரசியல்வாதிகள் பேசுவது போன்று வீரப்பேச்சுக்காக வரவில்லை. கடந்த ஒரு வருட காலத்தில் எந்தவொரு அரசியல் பலம் அதிகாராம் இல்லாமல் ரணில் விக்கிரமசிங்க என்கின்ற தனி ஒரு மனிதனை தெரியும் என்பதற்காக 26 கோடி ரூபாய்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டு வந்து அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருந்தேன்.

அது தவிர பல வருட காலமாக எங்கள் சொந்த நிதியில் இருந்து ஏழை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காகவும் வறியவர்களுக்கும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறோம். இவையெல்லாம் எதற்காக தூர நோக்கு, நல்ல சிந்தனை, நல்ல சமூகம் நல்ல மாற்றம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களின் கல்வியிலே நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்.

16 மாணவர்களை தத்தெடுத்து பல்கலைக்கழகம் வரை கற்பித்துக் கொண்டிருக்கிறோம்.பின்தங்கிய பாடசாலைகளில் கணித பாடங்களை அதற்கான ஆசிரியர்களை நியமித்து சொந்த பணத்தில் ஆசிரியர்களை நியமித்து கற்பித்துக் கொண்டிருக்கிறோம்.கல்வியில் சாதனை படைத்து எதிர்காலத்தில் எமது சமூகம் கற்றோர் சமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவற்றையெல்லாம் செய்கின்றோம்.எங்கள் சமூகம் நேர்தியாக சிந்திக்கின்ற சமூகமாக இருக்க வேண்டும் என்றால் அனைவரும் கற்றிருக்க வேண்டும்.

உங்கள் பிள்ளளைகள் நூறு வீதம் கற்றிருக்க வேண்டும்.இந்த கல்வியிலே மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் எங்களது தலையாய கடமையாக இருக்கிறது.நாங்கள் தெரிவு செய்யப்பட்டால் எங்களுக்கு கிடைக்கின்ற அனைத்து ஊதியங்களும் பாராளுமன்ற வருமான்களும் ஏழை மாணவர்களுக்காக செலவிடுவேன் என்ற உத்தரவாதத்தினை சத்தியமாக உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

எமது சகோதர சகோதரிகளே நீங்கள் இத்தனை காலமும் பிறரை வாழ வைப்பதற்காக நீங்கள் வீழ்ந்தீர்கள் உங்களைவ  வாழ வைக்க நாங்கள் வந்துள்ளோம். நாங்கள் அரசியல் வியாபரிகள் அல்ல மக்கள் சேவகர்கள். எநதவொரு வருமானமும் இல்லாமல் எந்தவொரு கொடுப்பனவும் இல்லாமல் எங்களுக்கு கிடைக்கின்ற அனைத்து கொடுப்பனவுகளையும் உங்களுக்கு கொடுத்து சேவை செய்ய வந்துள்ளோம்.

இன்று தமிழ் தேசியம் என்று பேசிக்கொண்டிருப்பவர்களால் உங்களுக்கு என்ன ஆனது.எதுவுமே இல்லை.ஆகக் குறைந்தது மாகாண சபை தேர்தலைக் கூட நடத்த முடியாத நிலையில்தான் அவாகள் உள்ளனர்.தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக சொந்த விருப்புக்காக சங்கென்றார்கள் வீடு என்றார்கள் வீடுமாறி சங்காக வந்தது.சங்கு மாறி வீடாக வந்தது.

சங்கு சின்னம் உண்மையிலேயே முன்னாள் ஜனாபதி ரணில் விக்கிரமசிங்கவை வெல்லவைப்பதற்கு உருவாக்கப்பட்டதுதான். பிள்ளையான் அவர்கள் சோளார் மின்சார உற்பத்திக்காக அபிவிருத்தி என்ற போர்வையில் தனியார் கம்பனி ஒன்றுக்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில் விவசாயிகளின் காணிகளை வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

அவர்களி என்னிடம் இது தொடர்பாக முறையிட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு பெற்றுக்கொடுத்தேன்.இதேபோன்று வாகரை பிரதேச செயலாளர் ஒருவரை இடமாற்றம் செய்தார்.

அங்குள்ள அரச காணிகளை கையகப்படுத்த முனைந்த போது அதனை தடுத்த பிரதேச செயலாளர்கள் எல்லாம் இடமாற்றம் செய்யப்பட்டனர்.ஆகவே எதிரிகளின் சவால்களுக்கு எல்லாம் அஞ்சப் போவதும் இல்லை பின் நிற்கப்போவதும் இல்லை.

நீங்கள் எங்களுடன் இணைந்து நில்லுங்கள்.எதிர்காலம் சுபீட்சமானதாக இருக்க வேண்டுமென்றால் எதிர்வரும் 14 ஆம் திகதி யாரை தெரிவு செய்ய வேண்டும் என்பது  நீங்கள் தான்.எங்கள் மீது ஆர்வம் இருந்தால் பசு சின்னத்திற்கும் 3 ஆம் இலக்கத்திற்கும் புள்ளடி இடுங்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ் எனக் கூறி விடை பெற்றுக்கொண்டார்.



அரசியலுக்கு மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பால் எங்களது சொந்த முயற்சியிலும் உதவத்தயார் - மோகன் எதிரிகளின் சவால்களுக்கு நாங்கள் அஞ்சப் பேவதில்லை பின் நிற்கப் போவதில்லை. உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் அரசியலுக்கு மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பால் எங்களது சொந்த முயற்சியிலும் உதவத் தயாரக இருக்கின்றோம். என மக்கள் மத்தியில் உரையாற்றும் போது சயேட்சை குழு வேட்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் படகு சின்னத்தில் போட்டியிடும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) சவால் விடுத்து தமது உரையினை நிகழ்த்தினார்.நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழு 13 இல் போட்டியிடும் வேட்பாளர் கணபதிப்பிள்ளை மோகன் தமது தேர்தல் பரப்புரை கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் நேற்று மாலை (27) இடம்பெற்றது. அங்கு ஏற்பாடு செய்யப்ட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது, உங்களுக்கு இதுவரை காலமும் நடந்தது என்ன எதுவும் இல்லை. வெற்றுப் பேச்சுக்களும் வீரவசனங்களும் ஏமாற்று விந்தைகளும் தங்கள் சார் சார்ந்தவர்களுக்கு அபிவிருத்திகளும் அவர்களுக்கு மாத்திரமே கிடைத்ததே தவிர உங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கான மாற்று சக்தியாக நாங்கள் வந்திருக்கிறோம் உங்களுக்கு உதவுவதற்காக. அரசியல்வாதிகள் பேசுவது போன்று வீரப்பேச்சுக்காக வரவில்லை. கடந்த ஒரு வருட காலத்தில் எந்தவொரு அரசியல் பலம் அதிகாராம் இல்லாமல் ரணில் விக்கிரமசிங்க என்கின்ற தனி ஒரு மனிதனை தெரியும் என்பதற்காக 26 கோடி ரூபாய்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டு வந்து அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருந்தேன். அது தவிர பல வருட காலமாக எங்கள் சொந்த நிதியில் இருந்து ஏழை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காகவும் வறியவர்களுக்கும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறோம். இவையெல்லாம் எதற்காக தூர நோக்கு, நல்ல சிந்தனை, நல்ல சமூகம் நல்ல மாற்றம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களின் கல்வியிலே நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். 16 மாணவர்களை தத்தெடுத்து பல்கலைக்கழகம் வரை கற்பித்துக் கொண்டிருக்கிறோம்.பின்தங்கிய பாடசாலைகளில் கணித பாடங்களை அதற்கான ஆசிரியர்களை நியமித்து சொந்த பணத்தில் ஆசிரியர்களை நியமித்து கற்பித்துக் கொண்டிருக்கிறோம்.கல்வியில் சாதனை படைத்து எதிர்காலத்தில் எமது சமூகம் கற்றோர் சமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவற்றையெல்லாம் செய்கின்றோம்.எங்கள் சமூகம் நேர்தியாக சிந்திக்கின்ற சமூகமாக இருக்க வேண்டும் என்றால் அனைவரும் கற்றிருக்க வேண்டும்.உங்கள் பிள்ளளைகள் நூறு வீதம் கற்றிருக்க வேண்டும்.இந்த கல்வியிலே மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் எங்களது தலையாய கடமையாக இருக்கிறது.நாங்கள் தெரிவு செய்யப்பட்டால் எங்களுக்கு கிடைக்கின்ற அனைத்து ஊதியங்களும் பாராளுமன்ற வருமான்களும் ஏழை மாணவர்களுக்காக செலவிடுவேன் என்ற உத்தரவாதத்தினை சத்தியமாக உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.எமது சகோதர சகோதரிகளே நீங்கள் இத்தனை காலமும் பிறரை வாழ வைப்பதற்காக நீங்கள் வீழ்ந்தீர்கள் உங்களைவ  வாழ வைக்க நாங்கள் வந்துள்ளோம். நாங்கள் அரசியல் வியாபரிகள் அல்ல மக்கள் சேவகர்கள். எநதவொரு வருமானமும் இல்லாமல் எந்தவொரு கொடுப்பனவும் இல்லாமல் எங்களுக்கு கிடைக்கின்ற அனைத்து கொடுப்பனவுகளையும் உங்களுக்கு கொடுத்து சேவை செய்ய வந்துள்ளோம். இன்று தமிழ் தேசியம் என்று பேசிக்கொண்டிருப்பவர்களால் உங்களுக்கு என்ன ஆனது.எதுவுமே இல்லை.ஆகக் குறைந்தது மாகாண சபை தேர்தலைக் கூட நடத்த முடியாத நிலையில்தான் அவாகள் உள்ளனர்.தங்கள் சுகபோக வாழ்க்கைக்காக சொந்த விருப்புக்காக சங்கென்றார்கள் வீடு என்றார்கள் வீடுமாறி சங்காக வந்தது.சங்கு மாறி வீடாக வந்தது.சங்கு சின்னம் உண்மையிலேயே முன்னாள் ஜனாபதி ரணில் விக்கிரமசிங்கவை வெல்லவைப்பதற்கு உருவாக்கப்பட்டதுதான். பிள்ளையான் அவர்கள் சோளார் மின்சார உற்பத்திக்காக அபிவிருத்தி என்ற போர்வையில் தனியார் கம்பனி ஒன்றுக்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில் விவசாயிகளின் காணிகளை வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.அவர்களி என்னிடம் இது தொடர்பாக முறையிட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு பெற்றுக்கொடுத்தேன்.இதேபோன்று வாகரை பிரதேச செயலாளர் ஒருவரை இடமாற்றம் செய்தார். அங்குள்ள அரச காணிகளை கையகப்படுத்த முனைந்த போது அதனை தடுத்த பிரதேச செயலாளர்கள் எல்லாம் இடமாற்றம் செய்யப்பட்டனர்.ஆகவே எதிரிகளின் சவால்களுக்கு எல்லாம் அஞ்சப் போவதும் இல்லை பின் நிற்கப்போவதும் இல்லை.நீங்கள் எங்களுடன் இணைந்து நில்லுங்கள்.எதிர்காலம் சுபீட்சமானதாக இருக்க வேண்டுமென்றால் எதிர்வரும் 14 ஆம் திகதி யாரை தெரிவு செய்ய வேண்டும் என்பது  நீங்கள் தான்.எங்கள் மீது ஆர்வம் இருந்தால் பசு சின்னத்திற்கும் 3 ஆம் இலக்கத்திற்கும் புள்ளடி இடுங்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ் எனக் கூறி விடை பெற்றுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement