• Mar 16 2025

மட்டு.கல்லடி பாலத்தில் விபத்து - மௌலவி ஒருவர் உயிரிழப்பு

Chithra / Mar 16th 2025, 12:13 pm
image


மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியை நேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மௌலவி எம்.எஸ்.எம். ஸபீர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அரச பேருந்துடன் பின்பக்கம் இருந்துவந்த மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

இதில் மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் இருந்து பயணித்த மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டு.கல்லடி பாலத்தில் விபத்து - மௌலவி ஒருவர் உயிரிழப்பு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியை நேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மௌலவி எம்.எஸ்.எம். ஸபீர் என்பவரே உயிரிழந்துள்ளார்.கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அரச பேருந்துடன் பின்பக்கம் இருந்துவந்த மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்இதில் மோட்டார் சைக்கிளில் பின்பகுதியில் இருந்து பயணித்த மௌலவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement