சீனாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து வகைகள்!

ஒரு புதிய தொகுதி மருந்து வகைகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.

650 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து வகைகள் சீனாவினால் இலங்கை மக்களுக்கென வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் சீனா இதனை வழங்குகின்றது.

இந்த உதவி பொருள்களுடன் செங்டு வாநூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்ட வாநூர்தி இன்று கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர எதிர்வரும் மாதங்களில் மேலும் 5 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் இலங்கைக்கான சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை