• May 07 2024

முக்கிய பகுதியிலுள்ள இராணுவ முகாமை அகற்றுவதற்கு நடவடிக்கை! samugammedia

Chithra / Mar 30th 2023, 1:03 pm
image

Advertisement

நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால் பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற 100,000 அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான பிரதேச சபையின் பழைய கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் பன்னை தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான வர்த்தக கட்டிட தொகுதியினை அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில் பிரதேச சபையின் பழைய கட்டிடத்தில் அமைந்திருக்கின்ற இராணுவ முகாமினை அகற்றுவதற்கான முன்னெடுப்புக்களின் ஓர் அங்கமாக புதன்கிழமை (29) அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆனையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் அழைத்து வந்து பார்வையிட்டிருந்தனர்.

இதன் போது இராணுவ உயர் அதிகாரி, அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லதீப், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபையின் கெளரவ முன்னாள் உறுப்பினர்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


முக்கிய பகுதியிலுள்ள இராணுவ முகாமை அகற்றுவதற்கு நடவடிக்கை samugammedia நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால் பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற 100,000 அமெரிக்க டொலர் நிதியினைக் கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான பிரதேச சபையின் பழைய கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் பன்னை தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான வர்த்தக கட்டிட தொகுதியினை அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.அதனடிப்படையில் பிரதேச சபையின் பழைய கட்டிடத்தில் அமைந்திருக்கின்ற இராணுவ முகாமினை அகற்றுவதற்கான முன்னெடுப்புக்களின் ஓர் அங்கமாக புதன்கிழமை (29) அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆனையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் அழைத்து வந்து பார்வையிட்டிருந்தனர்.இதன் போது இராணுவ உயர் அதிகாரி, அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லதீப், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபையின் கெளரவ முன்னாள் உறுப்பினர்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement