• May 19 2024

கிணற்றடியில் இருக்கும் பெண்களை போன்ற வாயாடிகளே எதிர்க்கட்சியினர்- சபையில் நிமல் லான்சா சாடல்!

Sharmi / Feb 10th 2023, 10:18 am
image

Advertisement

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் எதிர்கட்சிகள் முன்னெடுக்கவில்லை என்றும் மாறாக கிணற்றடியில் இருக்கும் பெண்களை போன்று இவர்கள் வாயாடிகளாக மட்டுமே இருப்பதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

மரணவீட்டிற்கு செல்பவர்களுக்கு கதைகளை கூறிக்கொண்டு இருப்பவர்களை போன்று எதிர்கட்சியினர் தற்போது கதைகளை கூறிக்கொண்டு இருப்பதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மேலும் தெரிவித்துள்ளார்.

9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க சுவையான கதைகளை கூறி மக்களை மகிழ்ச்சியடைய வைக்காமல் கசப்பான உண்மைகளை மக்களுக்கு அறிவிப்பதை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வரி அறவீடுகள் தொடர்பாக ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பதில்லை என்றும் அதனை மத்திய வங்கியுள்ள படித்த அறிவாளிகளே இவ்வாறான முன்மொழிவுகளை முன்வைப்பதாக நிமல் லான்சா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு எவ்வாறான நடைமுறைகளை கையாள வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் அறிவுரைகளை வழங்குவதாகவும் இதனையே ஜனாதிபதி, மக்களுக்கு அறிவித்து அதன்பின்னர் நடைமுறைப்படுத்துவதாக நிமல் லான்சா குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து செல்வது எவ்வாறு என்பதை எதிர்கட்சிகள் கூறவேண்டும் மாறாக மரண வீட்டில் இருந்து கதைப்பது போன்ற கதைகள் தேவைற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிணற்றடியில் இருக்கும் பெண்களை போன்ற வாயாடிகளே எதிர்க்கட்சியினர்- சபையில் நிமல் லான்சா சாடல் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் எதிர்கட்சிகள் முன்னெடுக்கவில்லை என்றும் மாறாக கிணற்றடியில் இருக்கும் பெண்களை போன்று இவர்கள் வாயாடிகளாக மட்டுமே இருப்பதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.மரணவீட்டிற்கு செல்பவர்களுக்கு கதைகளை கூறிக்கொண்டு இருப்பவர்களை போன்று எதிர்கட்சியினர் தற்போது கதைகளை கூறிக்கொண்டு இருப்பதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மேலும் தெரிவித்துள்ளார்.9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.ரணில் விக்கிரமசிங்க சுவையான கதைகளை கூறி மக்களை மகிழ்ச்சியடைய வைக்காமல் கசப்பான உண்மைகளை மக்களுக்கு அறிவிப்பதை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.வரி அறவீடுகள் தொடர்பாக ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பதில்லை என்றும் அதனை மத்திய வங்கியுள்ள படித்த அறிவாளிகளே இவ்வாறான முன்மொழிவுகளை முன்வைப்பதாக நிமல் லான்சா குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு எவ்வாறான நடைமுறைகளை கையாள வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் அறிவுரைகளை வழங்குவதாகவும் இதனையே ஜனாதிபதி, மக்களுக்கு அறிவித்து அதன்பின்னர் நடைமுறைப்படுத்துவதாக நிமல் லான்சா குறிப்பிட்டுள்ளார்.எனவே ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து செல்வது எவ்வாறு என்பதை எதிர்கட்சிகள் கூறவேண்டும் மாறாக மரண வீட்டில் இருந்து கதைப்பது போன்ற கதைகள் தேவைற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement