• Sep 21 2024

அவசரமாக கூடும் நாடாளுமன்றம் - சனியும், ஞாயிறும் சபையை நடத்துவதற்கும் தீர்மானம்.! samugammedia

Tamil nila / Jun 24th 2023, 5:40 pm
image

Advertisement

நாடாளுமன்ற அமர்வுகள் அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிலும் நடத்துவதற்கு ஆராயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி விதிமுறைகளை அங்கீகரித்துக்கொள்வதற்காக 

அடுத்த வாரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ், உள்நாட்டில் விற்கப்படும் சுமார் 36 பில்லியன் டொலர் மதிப்புள்ள பிணை முறிகள் மற்றும் உண்டியல்கள் தொடர்பான கடனின் ஒரு பகுதி மறுசீரமைக்கப்படும் என்று அறியப்படுகிறது.

மேலும் சில அரச வங்கிகள் மற்றும் விசேட நிதியங்களால் கொள்வனவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் பில்கள் ஆகியவற்றின் வட்டியை குறைக்கவோ அல்லது கடன் காலத்தை நீடிக்கவோ வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விதிமுறைகளை மதிசபா ஒப்புதல் பெற அவசர மதிசபா கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய வங்கியின் சுதந்திரச் சட்டத்தையும் நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 

இந்த கட்டளைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஜூலை மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

அவசரமாக கூடும் நாடாளுமன்றம் - சனியும், ஞாயிறும் சபையை நடத்துவதற்கும் தீர்மானம். samugammedia நாடாளுமன்ற அமர்வுகள் அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிலும் நடத்துவதற்கு ஆராயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி விதிமுறைகளை அங்கீகரித்துக்கொள்வதற்காக அடுத்த வாரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ், உள்நாட்டில் விற்கப்படும் சுமார் 36 பில்லியன் டொலர் மதிப்புள்ள பிணை முறிகள் மற்றும் உண்டியல்கள் தொடர்பான கடனின் ஒரு பகுதி மறுசீரமைக்கப்படும் என்று அறியப்படுகிறது.மேலும் சில அரச வங்கிகள் மற்றும் விசேட நிதியங்களால் கொள்வனவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் பில்கள் ஆகியவற்றின் வட்டியை குறைக்கவோ அல்லது கடன் காலத்தை நீடிக்கவோ வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மதிசபா ஒப்புதல் பெற அவசர மதிசபா கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.அத்துடன், மத்திய வங்கியின் சுதந்திரச் சட்டத்தையும் நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த கட்டளைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஜூலை மாதத்திற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement