• Nov 26 2024

கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி - மக்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு

Chithra / Aug 19th 2024, 12:20 pm
image

 

கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்போது நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளமையால், நாளாந்தம் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் நிலவும் நெரிசல் தற்போது நீங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு அச்சடிக்கும் புத்தகங்கள் நிலுவையின் காரணமாக சில தட்டுப்பாடுகளுடன் கடவுச்சீட்டு அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஆனால் தற்போது புதிய புத்தகங்கள் கிடைத்துள்ளதாகவும் இதனால் தினமும் 1000 கடவுச்சீட்டுகள் அச்சிடப்படும்.

ஒக்டோபர் மாதம் வரை குடிவரவுத் திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக திகதிகளை முன்பதிவு செய்தவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும்.

முன்பதிவு செய்ய கடினமாக இருக்கும் அவசரத் தேவைகள் உள்ளவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கப்படும்.

புதிய ஈ-பாஸ்போர்ட் புத்தகங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பெறப்பட உள்ளது. இதனால் ஈ-பாஸ்போர்ட் அச்சிடப்படும் பணியும் அந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்.

கடவுச்சீட்டு அச்சிடுவதற்கு புத்தகங்கள் இல்லாமை, தேவையற்ற உத்தியோகபூர்வ அழுத்தங்கள் போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி, தான் இராஜினாமா செய்யப் போவதாக வெளியான செய்திகள் பொய்யானவை என குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளர்.

கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி - மக்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு  கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்போது நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளமையால், நாளாந்தம் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.பத்தரமுல்ல குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் நிலவும் நெரிசல் தற்போது நீங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.கடவுச்சீட்டு அச்சடிக்கும் புத்தகங்கள் நிலுவையின் காரணமாக சில தட்டுப்பாடுகளுடன் கடவுச்சீட்டு அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது புதிய புத்தகங்கள் கிடைத்துள்ளதாகவும் இதனால் தினமும் 1000 கடவுச்சீட்டுகள் அச்சிடப்படும்.ஒக்டோபர் மாதம் வரை குடிவரவுத் திணைக்களத்தின் இணையத்தளத்தின் ஊடாக திகதிகளை முன்பதிவு செய்தவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும்.முன்பதிவு செய்ய கடினமாக இருக்கும் அவசரத் தேவைகள் உள்ளவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கப்படும்.புதிய ஈ-பாஸ்போர்ட் புத்தகங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பெறப்பட உள்ளது. இதனால் ஈ-பாஸ்போர்ட் அச்சிடப்படும் பணியும் அந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்.கடவுச்சீட்டு அச்சிடுவதற்கு புத்தகங்கள் இல்லாமை, தேவையற்ற உத்தியோகபூர்வ அழுத்தங்கள் போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி, தான் இராஜினாமா செய்யப் போவதாக வெளியான செய்திகள் பொய்யானவை என குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளர்.

Advertisement

Advertisement

Advertisement