• May 18 2024

புத்தளத்தில் முஸ்லிம் சமூகத்தால் அமைதி எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு!

Sharmi / Jan 13th 2023, 4:14 pm
image

Advertisement

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் புத்தளம் சமூகமும், புத்தளம் முஸ்லிம்களும் அவமானப்படுத்தப்படுவதை கண்டித்து புத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) அமைதிப் எதிர்ப்புப் பேராட்டம் ஒன்று இடம்பெற்றது.

புத்தளம் பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை மற்றும் புத்தளம் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த அமைதி போராட்டம் புத்தளம் பெரிய பள்ளிக்கு அருகாமையில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஆரம்பமானது.

'முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட உரிமையினைப் பாதுகாப்பதற்கான புத்தளம் மக்களின் குரல்' எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மஸ்ஜித்களின் நிர்வாகிகள், உலமாக்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது 'தனியார் சட்ட விவகாரத்தில் நீதியமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்', 'வாழும் பிரதேசத்தை நிர்வாணமாக்கிவிட்டு பல்தேசிய எஜன்டாக்களுக்கு சுககபோகம் அனுபவிக்கும் உங்கள் மானம் எங்கே?', 'பலதார மணம் ஆண்களுக்கான  சலுகை அல்ல', 'சட்ட திருத்தத்தின் பின்புலத்தில் என்.ஜி.ஓ மறைகரம்', 'புத்தளத்தின் நறுமணத்தை மறுமண சீர்திருத்தம் என்ற பெயரில் துர்மணமாக்கியவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்', 'முஸ்லிம் தனியார் சட்டம் அந்த நாட்டு மக்களின் உரிமை', 'புத்தளத்தில் 3000 விவாக வழக்குகள் பதிவானதா? இதன் உண்மை என்ன...', 'பெண் காதிகள் நியமனம் தொடர்பில் நீதியமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறப்படும் 6000 புத்தளம் பெண்கள் யார்?' இதுபோன்ற தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதப்பட்ட பல சுலோகங்களை ஏந்தியவாறு ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

அத்துடன், புத்தளம் பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை மற்றும் புத்தளம் சிவில் அமைப்புக்கள் இணைந்து கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை உப தலைவர் அஷ்ஷெய்க் ஐ.அப்துல் ஹமீத் அவர்களினால் கண்டன அறிக்கை வாசிக்கப்பட்டது.
 
மேற்படி கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

எமது நாட்டில் ஏழு தசாப்தங்களுக்கு மேல் சட்டரீதியாக நடைமுறையில் இருந்து வரும் காதி நீதிமன்றம் உள்ளடங்களான முஸ்லிம் தனியார் சட்டம் இந்நாட்டு முஸ்லிம்களின் தவிர்க்க முடியாத உரிமை என்பதை அழுத்தமாக கூறிவைக்க விரும்புகிறோம்.

மேலும், விவாகரத்து சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை சகல தரப்பினரின் அங்கீகாரத்துடன் மேற்கொள்வதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதுடன், வெளிப்படை தன்மையற்ற வகையில், பெரும்பான்மையான முஸ்லிம்களின் விருப்பத்திற்கு மாற்றமாக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான திருத்தங்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

அத்துடன், காதி நீதிமன்ற முறைமையில் காணப்படுமு; சில குறைபாடுகள் அல்லது காதி நீதிபதிகள் ஒரு சிலரின் குறைபாடுகள் காரணமாக ஒட்டுமொத்த காதிமுறையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற சிலரின் நியாயமற்ற அறிவுபூர்வமில்லாத கருத்துக்கள் குறித்து எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
அத்தோடு, திறந்த மனதோடு, இந்த முறைமை குறித்து தேடி அறியுமாறும் அதன் நன்மைகள் குறித்து விளங்குமாறும் குறித்த தரப்பினரை வினயமாக வேண்டிக்கொள்கின்றோம்.

 விவாகரத்து சட்டத்திலிருந்து பலதாரமனத்தை ஒழித்தல், வலி அதிகாரத்தை இல்லாதாக்குதல், மூலம் சமூகத்தில் மேலும் குடும்ப சீர்கோடுகளும் கலாசார சீரழிவுகளும் ஏற்படும் என்பதை காதி முறையை எதிர்ப்போர் சிந்திக்க மறுப்பது குறித்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றோம்.

மேலும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாவிடின் புத்தளத்திலிருந்து ஆயிரக்கணக்காக முஸ்லிம் பெண்களை கொழும்புக்கு அழைத்து வந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவோம் என நீதி அமைச்சரை அச்சுறுத்தி பிழையாக வழிநடத்த முனைந்தவர்களை புத்தளம் மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் என அந்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



புத்தளத்தில் முஸ்லிம் சமூகத்தால் அமைதி எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் புத்தளம் சமூகமும், புத்தளம் முஸ்லிம்களும் அவமானப்படுத்தப்படுவதை கண்டித்து புத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) அமைதிப் எதிர்ப்புப் பேராட்டம் ஒன்று இடம்பெற்றது.புத்தளம் பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை மற்றும் புத்தளம் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த அமைதி போராட்டம் புத்தளம் பெரிய பள்ளிக்கு அருகாமையில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஆரம்பமானது.'முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட உரிமையினைப் பாதுகாப்பதற்கான புத்தளம் மக்களின் குரல்' எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மஸ்ஜித்களின் நிர்வாகிகள், உலமாக்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.இதன்போது 'தனியார் சட்ட விவகாரத்தில் நீதியமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்', 'வாழும் பிரதேசத்தை நிர்வாணமாக்கிவிட்டு பல்தேசிய எஜன்டாக்களுக்கு சுககபோகம் அனுபவிக்கும் உங்கள் மானம் எங்கே', 'பலதார மணம் ஆண்களுக்கான  சலுகை அல்ல', 'சட்ட திருத்தத்தின் பின்புலத்தில் என்.ஜி.ஓ மறைகரம்', 'புத்தளத்தின் நறுமணத்தை மறுமண சீர்திருத்தம் என்ற பெயரில் துர்மணமாக்கியவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்', 'முஸ்லிம் தனியார் சட்டம் அந்த நாட்டு மக்களின் உரிமை', 'புத்தளத்தில் 3000 விவாக வழக்குகள் பதிவானதா இதன் உண்மை என்ன.', 'பெண் காதிகள் நியமனம் தொடர்பில் நீதியமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறப்படும் 6000 புத்தளம் பெண்கள் யார்' இதுபோன்ற தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதப்பட்ட பல சுலோகங்களை ஏந்தியவாறு ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.அத்துடன், புத்தளம் பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை மற்றும் புத்தளம் சிவில் அமைப்புக்கள் இணைந்து கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை உப தலைவர் அஷ்ஷெய்க் ஐ.அப்துல் ஹமீத் அவர்களினால் கண்டன அறிக்கை வாசிக்கப்பட்டது. மேற்படி கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,எமது நாட்டில் ஏழு தசாப்தங்களுக்கு மேல் சட்டரீதியாக நடைமுறையில் இருந்து வரும் காதி நீதிமன்றம் உள்ளடங்களான முஸ்லிம் தனியார் சட்டம் இந்நாட்டு முஸ்லிம்களின் தவிர்க்க முடியாத உரிமை என்பதை அழுத்தமாக கூறிவைக்க விரும்புகிறோம்.மேலும், விவாகரத்து சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை சகல தரப்பினரின் அங்கீகாரத்துடன் மேற்கொள்வதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதுடன், வெளிப்படை தன்மையற்ற வகையில், பெரும்பான்மையான முஸ்லிம்களின் விருப்பத்திற்கு மாற்றமாக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான திருத்தங்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.அத்துடன், காதி நீதிமன்ற முறைமையில் காணப்படுமு; சில குறைபாடுகள் அல்லது காதி நீதிபதிகள் ஒரு சிலரின் குறைபாடுகள் காரணமாக ஒட்டுமொத்த காதிமுறையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற சிலரின் நியாயமற்ற அறிவுபூர்வமில்லாத கருத்துக்கள் குறித்து எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.அத்தோடு, திறந்த மனதோடு, இந்த முறைமை குறித்து தேடி அறியுமாறும் அதன் நன்மைகள் குறித்து விளங்குமாறும் குறித்த தரப்பினரை வினயமாக வேண்டிக்கொள்கின்றோம். விவாகரத்து சட்டத்திலிருந்து பலதாரமனத்தை ஒழித்தல், வலி அதிகாரத்தை இல்லாதாக்குதல், மூலம் சமூகத்தில் மேலும் குடும்ப சீர்கோடுகளும் கலாசார சீரழிவுகளும் ஏற்படும் என்பதை காதி முறையை எதிர்ப்போர் சிந்திக்க மறுப்பது குறித்து எமது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றோம்.மேலும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாவிடின் புத்தளத்திலிருந்து ஆயிரக்கணக்காக முஸ்லிம் பெண்களை கொழும்புக்கு அழைத்து வந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவோம் என நீதி அமைச்சரை அச்சுறுத்தி பிழையாக வழிநடத்த முனைந்தவர்களை புத்தளம் மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் என அந்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement