• May 08 2024

நல்லூரானுக்கு வந்த சோதனை: அதிர்ச்சியடைந்த பக்தர்கள்!

Sharmi / Jan 13th 2023, 3:53 pm
image

Advertisement

இலங்கையில் தமிழ் மொழியை புறக்கணித்து ஏனைய மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் செயற்பாடுகள் அண்மைக் காலமாக அதிகரித்த நிலையில் காணப்படுகிறது.

இந்த செயற்பாடுகள் வெளிமாவட்டங்களில் அதிகமாக காணப்பட்ட போதும் யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் குறைவாக காணப்பட்டது. ஆனால் அது தற்போது மாற்றம் அடைந்துள்ளது.

அதாவது நல்லூருக்கு உள் நுழையும் வாயிலில் "பாதணிகளுடன் உட்செல்ல தடை" என்ற வாசகம் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அமைந்துள்ளது.

நல்லூர் முருகன் ஆலயம் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயம் அத்துடன் இது தமிழர்களின் அடையாளம். இங்கே இந்துக்களும், உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்து நல்லூர் கந்தனை தரிசித்து செல்கின்றனர்.

இது இவ்வாறு இருக்கையில் தமிழர் தாயகத்தில் உள்ள தமிழர்களின் ஆலயத்தில் இவ்வாறு உள்ளமை அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெயர்ப்பலகையை தமிழில் பிரதான மொழியாக கொண்டு அமைக்க வேண்டும் என பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.




நல்லூரானுக்கு வந்த சோதனை: அதிர்ச்சியடைந்த பக்தர்கள் இலங்கையில் தமிழ் மொழியை புறக்கணித்து ஏனைய மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் செயற்பாடுகள் அண்மைக் காலமாக அதிகரித்த நிலையில் காணப்படுகிறது.இந்த செயற்பாடுகள் வெளிமாவட்டங்களில் அதிகமாக காணப்பட்ட போதும் யாழ்ப்பாணத்தில் ஒப்பீட்டளவில் குறைவாக காணப்பட்டது. ஆனால் அது தற்போது மாற்றம் அடைந்துள்ளது.அதாவது நல்லூருக்கு உள் நுழையும் வாயிலில் "பாதணிகளுடன் உட்செல்ல தடை" என்ற வாசகம் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அமைந்துள்ளது.நல்லூர் முருகன் ஆலயம் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயம் அத்துடன் இது தமிழர்களின் அடையாளம். இங்கே இந்துக்களும், உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்து நல்லூர் கந்தனை தரிசித்து செல்கின்றனர்.இது இவ்வாறு இருக்கையில் தமிழர் தாயகத்தில் உள்ள தமிழர்களின் ஆலயத்தில் இவ்வாறு உள்ளமை அனைவர் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த பெயர்ப்பலகையை தமிழில் பிரதான மொழியாக கொண்டு அமைக்க வேண்டும் என பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement