இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில், கடந்த 5 வருடங்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இவர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 181 போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
எல்லை கண்காணிப்பு பிரிவின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை வெளியிட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 62 போலி ஆவணங்கள் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் தீவிர முயற்சியில் மக்கள் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தில், கடந்த 5 வருடங்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இவர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளனர்.கடந்த 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் 181 போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.எல்லை கண்காணிப்பு பிரிவின் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை வெளியிட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.2022 ஆம் ஆண்டில் 62 போலி ஆவணங்கள் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது