• Nov 23 2024

இலங்கையில் அன்றாட உணவுக்காக கடன் பெறும் மக்கள்...! பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!samugammedia

Sharmi / Jan 6th 2024, 11:55 am
image

இலங்கையில் அறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுக்காக கடன் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் வாழும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை முப்பத்தி ஒரு இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முன்னூறு என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், உணவுக்காகக் கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை மொத்தக் கடனாளிக் குடும்பங்களில் 22.3 சதவீதமாக இருப்பதாகப் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

இதேவேளை, கிட்டத்தட்ட 370,000 இதர குடும்பங்கள் கடனை மீளச் செலுத்துவதற்காக கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

491000 குடும்பங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்றுள்ளதாக திரு.வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டுகிறார்.

கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் 53,200 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2022க்குப் பிறகு 688,000 குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளன.

இவர்களில் பெரும்பாலானோர் அடமான முறையில் கடன் பெற்றுள்ளனர்.

970,000 குடும்பங்கள் அடமான நடவடிக்கை மூலம் கடன் பெற்றுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக 970,00 குடும்பங்கள் வங்கிகளிலும், 272,250 குடும்பங்கள் நிதி நிறுவனங்களிலும், 303,500 குடும்பங்கள் பண தரகர்களிடமிருந்தும் கடன் பெற்றுள்ளதாக திரு.வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் அன்றாட உணவுக்காக கடன் பெறும் மக்கள். பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.samugammedia இலங்கையில் அறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுக்காக கடன் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்நாட்டில் வாழும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை முப்பத்தி ஒரு இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முன்னூறு என்று கூறப்படுகிறது.இந்நிலையில், உணவுக்காகக் கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை மொத்தக் கடனாளிக் குடும்பங்களில் 22.3 சதவீதமாக இருப்பதாகப் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.இதேவேளை, கிட்டத்தட்ட 370,000 இதர குடும்பங்கள் கடனை மீளச் செலுத்துவதற்காக கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.491000 குடும்பங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்றுள்ளதாக திரு.வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டுகிறார்.கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் 53,200 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.2022க்குப் பிறகு 688,000 குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளன.இவர்களில் பெரும்பாலானோர் அடமான முறையில் கடன் பெற்றுள்ளனர்.970,000 குடும்பங்கள் அடமான நடவடிக்கை மூலம் கடன் பெற்றுள்ளனர்.இதற்கு மேலதிகமாக 970,00 குடும்பங்கள் வங்கிகளிலும், 272,250 குடும்பங்கள் நிதி நிறுவனங்களிலும், 303,500 குடும்பங்கள் பண தரகர்களிடமிருந்தும் கடன் பெற்றுள்ளதாக திரு.வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement