• Mar 31 2025

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு!

Chithra / Mar 28th 2025, 8:20 am
image


 

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த  கை துப்பாக்கியொன்றும், இரு மெகசின்களும் மற்றும் 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

களுத்துறை, பண்டுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலிங்கந்த வீதியில் உள்ள வெறிச்சோடிய காணியொன்றிலேயே இவை புதைத்து வைக்கப்பட்டிருந்தது.

நேற்று (27) மாலை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவின் தேடுதல் நடவடிக்கையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு  மண்ணில் புதைக்கப்பட்டிருந்த  கை துப்பாக்கியொன்றும், இரு மெகசின்களும் மற்றும் 05 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.களுத்துறை, பண்டுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலிங்கந்த வீதியில் உள்ள வெறிச்சோடிய காணியொன்றிலேயே இவை புதைத்து வைக்கப்பட்டிருந்தது.நேற்று (27) மாலை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவின் தேடுதல் நடவடிக்கையில் இவை மீட்கப்பட்டுள்ளன.குறித்த இடத்தில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement