பல்கலைக்கழக மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி!

115

சினோபோர்ம் கொரோனாத் தடுப்பூசியை முழுமையாக போடப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பைஸர், பயோஎன்டெக் தடுப்பூசி, பூஸ்டராக மூன்றாம் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி கிடைத்த 6 மாதங்களுக்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும்.

பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பூசி போடுவதைத் தாமதப்படுத்தினால் பைஸர் பூஸ்டர் அளவைப் பெறுவது தாமதமாகும்.

எனவே, பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: