• May 18 2024

திருகோணமலையில் விழுந்து நொறுங்கிய விமானம்! வெளியான உயிரிழந்த வீரர்களின் விபரங்கள் samugammedia

Chithra / Aug 8th 2023, 6:36 am
image

Advertisement

திருகோணமலை, சீனன்குடா விமானப்படை தளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானப்படை வீரர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

சீனன்குடா துறைமுக விமானப்படை  பயிற்சி முகாமில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட GT6 ரக இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் விமானப்படை பொறியியலாளர் உயிரிழந்துள்ளதாக சீன துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் விமானி தரிந்து ஹேரத் மற்றும் பொறியியலாளர்  மதுசங்க வர்ணகுலசூரிய ஆகியோரோ இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இலகுரக விமானம் ஓடுபாதையில் இருந்து சற்று உயரத்தில் இருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளதாக விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.


ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட மூன்று நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்த இலகுரக விமானம் சோதனை நோக்கத்திற்காக பறக்கவிடப்பட்டதாகவும் விமானப்படை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த விமானம் ஓடுபாதையில் விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சீன துறைமுக பொலிஸஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் விழுந்து நொறுங்கிய விமானம் வெளியான உயிரிழந்த வீரர்களின் விபரங்கள் samugammedia திருகோணமலை, சீனன்குடா விமானப்படை தளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானப்படை வீரர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.சீனன்குடா துறைமுக விமானப்படை  பயிற்சி முகாமில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட GT6 ரக இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் விமானப்படை பொறியியலாளர் உயிரிழந்துள்ளதாக சீன துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் விமானி தரிந்து ஹேரத் மற்றும் பொறியியலாளர்  மதுசங்க வர்ணகுலசூரிய ஆகியோரோ இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இலகுரக விமானம் ஓடுபாதையில் இருந்து சற்று உயரத்தில் இருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளதாக விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட மூன்று நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்.இந்த இலகுரக விமானம் சோதனை நோக்கத்திற்காக பறக்கவிடப்பட்டதாகவும் விமானப்படை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.குறித்த விமானம் ஓடுபாதையில் விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சீன துறைமுக பொலிஸஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement