• May 12 2024

தேர்தலை திட்டமிட்டு தடுக்கும் செயல்:ஜனநாயக மறுப்பு - திலகர் தெரிவிப்பு!SamugamMedia

Sharmi / Feb 15th 2023, 2:27 pm
image

Advertisement

இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அறிவித்து அதற்கான வேட்புமனுக்கையும் கோரி தேர்தல் திகதியையும் அறிவித்ததன் பின்னர் தேர்தலிக்கு அவசியமான நிதியை ஒதுக்கீடுசெய்யாமல் அரசாங்கம் காலம் தாழ்த்துவதானது ஜனநாயக உரிமை மறுப்பாகும் என மலையக அரசியல் அரங்கத்தின்தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

அக்கரப்பத்தனை பகுதியில் தேர்தல் களப்பணியில் ஈடுபட்டிருந்த அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை சுயாதீனமாக நடாத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டுதல் வேண்டும்.
பிரச்சார செலவுகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில்தான் தேர்தல் செலவுகளுக்கு என ஒரு ஒதுக்கீட்டினையும் செய்வதாக கடந்த வரவு செலவுத் திட்டத்திலே அரசாங்கம் அறிவித்தது.

அப்போது குறை நிரப்புப்பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் அதனை ஆணைக்குழுவக்கு பெற்றுக் கொடுத்து நாட்டு மக்களின் ஜனயாக உரிமையை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே இதனை கண்டிப்பதோடு மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலை திட்டமிட்டு தடுக்கும் செயல்:ஜனநாயக மறுப்பு - திலகர் தெரிவிப்புSamugamMedia இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அறிவித்து அதற்கான வேட்புமனுக்கையும் கோரி தேர்தல் திகதியையும் அறிவித்ததன் பின்னர் தேர்தலிக்கு அவசியமான நிதியை ஒதுக்கீடுசெய்யாமல் அரசாங்கம் காலம் தாழ்த்துவதானது ஜனநாயக உரிமை மறுப்பாகும் என மலையக அரசியல் அரங்கத்தின்தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார். அக்கரப்பத்தனை பகுதியில் தேர்தல் களப்பணியில் ஈடுபட்டிருந்த அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை சுயாதீனமாக நடாத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டுதல் வேண்டும். பிரச்சார செலவுகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில்தான் தேர்தல் செலவுகளுக்கு என ஒரு ஒதுக்கீட்டினையும் செய்வதாக கடந்த வரவு செலவுத் திட்டத்திலே அரசாங்கம் அறிவித்தது. அப்போது குறை நிரப்புப்பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் அதனை ஆணைக்குழுவக்கு பெற்றுக் கொடுத்து நாட்டு மக்களின் ஜனயாக உரிமையை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே இதனை கண்டிப்பதோடு மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement