• Jan 15 2025

இலங்கைக்கு வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி

Chithra / Jan 8th 2025, 7:17 am
image

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனக் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

எனினும், இந்தியப் பிரதமரின் வருகைக்கான திகதிகள் இன்னும் இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேலும் கூறுகையில், 

இந்தப் பயணத்துக்கான சரியான நேரத்தை நாங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

முன்னதாக கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்புக்கு இணங்கவே பிரதமர் மோடியின் விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னதாக பிரதமர் மோடி 2015 மற்றும் 2017க்கு இடையில் இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கைக்கு வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனக் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.எனினும், இந்தியப் பிரதமரின் வருகைக்கான திகதிகள் இன்னும் இரு தரப்பினராலும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மேலும் கூறுகையில், இந்தப் பயணத்துக்கான சரியான நேரத்தை நாங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.முன்னதாக கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.இந்த அழைப்புக்கு இணங்கவே பிரதமர் மோடியின் விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுமுன்னதாக பிரதமர் மோடி 2015 மற்றும் 2017க்கு இடையில் இரண்டு முறை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement