• Jan 13 2025

வவுனியாவில் மரக் கடத்தலில் ஈடுபடும் பொலிசார் : பொதுமக்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு

Tharmini / Dec 26th 2024, 7:49 pm
image

வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள இரணை இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வன இலகா பகுதியில், கடந்தவாரம் வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் தலைமையில் பெரியளவில் மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலங்குளம், இரணை இலுப்பைக்குளம் வன இலகாப் பகுதியில் பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலிற்கு அமைவாக வன இலாகப்பகுதியில் பாரிய மரங்கள் வெட்டப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கடமைக்காகவும் பொறுப்பதிகாரியை காப்பாற்றுவதற்காகவும் சிலரை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் இம் மரக்கடத்தலின் பிரதான குற்றவாளியான பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரிக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ் முறைப்பாடு குறித்து பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




வவுனியாவில் மரக் கடத்தலில் ஈடுபடும் பொலிசார் : பொதுமக்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள இரணை இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வன இலகா பகுதியில், கடந்தவாரம் வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் தலைமையில் பெரியளவில் மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலங்குளம், இரணை இலுப்பைக்குளம் வன இலகாப் பகுதியில் பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலிற்கு அமைவாக வன இலாகப்பகுதியில் பாரிய மரங்கள் வெட்டப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.எனினும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் கடமைக்காகவும் பொறுப்பதிகாரியை காப்பாற்றுவதற்காகவும் சிலரை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் இம் மரக்கடத்தலின் பிரதான குற்றவாளியான பூவரசன்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரிக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் முறைப்பாடு குறித்து பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement